கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஹெலன். ஆனா பென் , லால், நோபல் பாபு தாமஸ் ஆகியோர் நடித்திருக்க இந்த படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. மிக எளிமையான கதை களத்தை எடுத்து அதை மிகச் சிறப்பாக கையாண்டு இருந்தார் இயக்குனர் முத்துக்குட்டி சேவியர். இந்தப் படம் வெளியானபோதே இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் அருண்பாண்டியன் வாங்கி இருந்தார்.
90களில் பல திரைப்படங்களில் நடித்தும் தயாரித்தும் பிரபலமாக இருந்த நடிகர் அருண்பாண்டியன் ஊமை விழிகள், இணைந்த கைகள், தேவன், அதிகாரி உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அங்காடி தெரு, வில்லு, ஜூங்கா ,பேராண்மை, அனேகன் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் உ ள்ளார்.
இந்த நிலையில் அவரது மகளும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருக்க இப்பொழுது அப்பா மகள் இருவரும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹெலன் அதிகாரபூர்வமாக ரீமேக்காக அன்பிற்கினியாள் உருவாகியிருக்க இந்த படத்தை இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார்.
ஃபார்வேர்ட் மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணாதப்பான்னு எத்தனை தடவை சொல்றது என மகளுக்கும் அப்பாவுக்கும் நடக்கின்ற க்யூட்டான சண்டையுடன் ஆரம்பிக்கும் டிரைலர் பல விருவிருப்பான காட்சிகளுடன் காதல் காமெடி செண்டிமென்ட் ஆக்ஷன் என தூள் கிளப்புகிறது. தாயில்லாமல் அப்பா அருண்பாண்டியனின் வளர்ப்பில் மட்டுமே வளரும் கீர்த்தி பாண்டியன் ஒரு பீட்சா ஸ்டோரில் வேலை செய்துகொண்டு வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் இது அவரது அப்பாவிற்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் வீட்டிற்கு வராமல் காணாமல் போய்விடுகிறார் . போலீஸ் ஸ்டேஷன் உட்பட அனைத்து இடங்களிலும் அவரது காதலர் மற்றும் அப்பா என அனைவரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு காட்சிக்குக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அன்பிற்கினியாள் டிரைலர் வெளியாகி இருக்க இதனை அருள் பாண்டியன் சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளார். அனைவரையும் கவரும் வகையில் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் இணையதளத்தில் சக்கைப்போடு போட்டு வர, வரும் சம்மரில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை : நடிகர் அருள் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழுக்கு தும்பா படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.
மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஹெலன் திரைப்படம் தமிழில் உருவாக அதற்கு அன்பிற்பிரியாள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
த்ரிஷியம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்...மலையாளத்தில் 3 ம் பாகமும் தயாராகிறது
அருண் பாண்டியன் நடித்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அவரது மகள் லீட் ரோலில் நடித்திருக்க அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.