Back
Home » ஆரோக்கியம்
ஆண்களே, நீங்கள் என்றும் 16 போல் இருக்க இவற்றை செய்தாலே போதும்..!
Boldsky | 20th Sep, 2018 03:01 PM
 • எவ்வாறு முதுமை தோற்றம் வருகிறது..?

  நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நம் உடலின் ஆரோக்கியத்தை பேசுகிறது. அதாவது, ஒருவரின் உடல் ஆரோக்கியமானது அவர் உண்ணும் உணவை பொருத்தும், செய்யும் செயலை பொருத்தே அமையும். அந்த வகையில் உடலில் உள்ள செல்கள் சிதைவடைய தொடங்கினால், விரைவிலே நமக்கு முதுமை வந்து விடும்.


 • காஃபி வேண்டாம்... டீயே போதும்..!

  ஆண்களே, காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அதனை நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் உங்களை வயதானவராக மாற்ற கூடிய முக்கிய ஆற்றல் இந்த காஃபிக்கு உள்ளது. மாறாக கிரீன் டீயை அன்றாடம் காலையில் குடித்து வந்தால், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் செல்களை புத்துணர்வூட்டி சருமத்தை இளமையாக வைத்து கொள்ளும்.


 • சீரான தாம்பத்திய வாழ்வு..!

  மனிதன் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான கலவியில் ஈடுபட வேண்டும். ஒரு வாரத்திற்கு 3 முறை தாம்பத்தியம் வைத்து கொண்டால் ஆண்களே நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம் என பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


 • ஹார்மோன் சுரக்கும் நேரம்..!

  அதிக காலம் உறங்குவதும் தவறு, அதே போன்று மிக குறைந்த காலம் உறங்குவதும் தவறே. உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமென்றால் கட்டாயம் நீங்கள் இரவில் விரைவாகவே தூங்க செல்ல வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் தான் ஆண்களில் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் சுரக்க செய்யுமாம். எனவே விரைவாக உறங்க செல்லுங்கள் நண்பர்களே.

  MOST READ: சிறுநீரக கற்களை கரைக்க கூடிய நம் முன்னோர்களின் அற்புத முறைகள் ..!


 • சுடு தண்ணி குளியலா..?

  ஆண்களே, உங்களுக்கு சுடு நீர் குளியல் பிடிக்கும் என்றால், நீங்கள் கூடிய விரைவிலே முதுமை பெற்று விடுவீர்கள் என ஆய்விகள் சொல்கிறது. இவை உடலின் தட்ப வெப்பத்தை அதிகமாக்கி சருமத்தை வறட்சி ஆக்குகிறது. அத்துடன் தோலின் ஈரப்பதமும் குறைந்து, முதுமையை தந்துவிடும்.


 • செல்போனும் வயதும்..!

  தோல் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒரு சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் முதுமையை விரைவிலே அடைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். இளம்வயதினர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது.


 • சூரியனிடம் ஜாக்கிரதை...!

  இந்த அண்டத்தின் முதன்மையான ஆதாரம் சூரியன் தான். இவற்றில் இருந்து வரும் ஒளி உடலுக்கு நல்லதுதான், என்றாலும் இவற்றில் இருந்து வருகின்ற UV கதிர்கள் இளம் வயதிலே வயதான தோற்றத்தை தர கூடியது. பொதுவாக காலை வெயில் உடலுக்கு நன்மையே தரும். இருப்பினும் மற்ற நேரங்களில் வெளியில் செல்லும்போது சன்ஸ்க்ரீன் லோஷன் தடவி கொண்டு செல்லுங்கள்.


 • தினமும் குளியலா..?

  தினமும் ஆண்கள் தலைக்கு வெறும் நீரை மட்டும் ஊற்றி குளித்தால் நல்லதே என ஆய்வுகள் சொல்கிறது. இது உடலின் உஷ்ணத்தை சீராக வைக்கிறதாம். முடியின் ஆரோக்கியமும் இளமைக்கு முக்கியம் தானே. எனவே வாரத்திற்கு 2 முறை சிகைக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

  MOST READ: ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா..?


 • வெளிச்சத்தில் உறங்காதீர்கள்...!

  இரவு தூங்கும் போது நல்ல இருளுடன் உறங்க வேண்டும். மாறாக அதிக வெளிச்சத்துடன் உறங்கினால், அவை நம் உடலுக்கு நல்ல தூக்கத்தை தராதம். இதனால், உடலின் செல்களும் புத்துணர்வு பெறாமல் அதிக பாதிப்பை உடலுக்கு தரும்.


 • இது போதுமே...!

  சாப்பிட கூடிய உணவில் அதிகமாக நார்சத்துக்கள், புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக சிட்ரஸ் வகை உணவுகளை சேர்த்து கொண்டால், அவற்றில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உங்களின் சருமத்தை இளமையாக மாற்றும்.


 • முதல் ஆதாரம்...!

  இந்த பூமியின் முதல் ஆதாரமான நீரை அதிகம் பருக பழகி கொள்ளுங்கள். உடலில் நீர் சத்து அதிகம் இருந்தாலே எல்லா வித நோய்களில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி கூடும், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே நீங்கள் நாள் முழுக்கவும் புத்துணர்வுடன் இருப்பீர்கள்.


 • கொழுப்பு அறவே வேண்டாம்..!

  உடலுக்கு அதிக கொழுப்பை தர கூடிய உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்துக்கள் கொண்ட உணவு உடலின் ரத்த ஓட்டத்தை பாதித்து, விரைவிலே முதுமையை தந்து விடும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கட்டாயம் ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

  MOST READ: சில பேர் எவ்வளோ புகைப் பிடிச்சாலும் புற்றுநோய் வராது? அது ஏன்'னு தெரியுமா??


 • போதைக்கு நோ நோ..!

  போதை பழக்கம், மது பழக்கம் உள்ள ஆண்கள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது உடலின் செய்லபட்டை முற்றிலுமாக கெடுக்க கூடியது. இவை ஒவ்வொரு உறுப்பாக சிதைவடைய செய்து இறுதியில் மரணத்தை தந்து விடும்.


  இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
நியூட்டன் சொன்னது போல, நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் சமமான மற்றும் அதற்கு எதிரான ஒரு வினை எப்போதும் இருக்க தான் செய்கிறது. இங்குள்ள எல்லா உயிரினத்திற்கும் இதே கோட்பாடு என்றுமே மெய்ப்பித்து கொண்டுதான் உள்ளது. ஒரு மனிதனின் ஆற்றல் கூட, செய்யும் செயலை வைத்தே நிர்ணயிக்க படுகிறது. அந்த வகையில் நாம் கடைபிடிக்க கூடிய ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் ஏராளமான இணைப்பை இந்த உலகில் ஏற்படுத்துகிறது.

ஒரு சில நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும், ஒரு சில தீமை ஏற்படுத்தும். இங்குள்ள எல்லோருக்கும் நீண்ட நாள் இளமையாக இருக்க வேண்டும் என்ற அதீத ஆசை இருக்கத்தான். இதனை அடைய இந்த பதிவில் கூறும் முக்கிய குறிப்புகளை கடைபிடியுங்கள் நண்பர்களே.

   
 
ஆரோக்கியம்