Back
Home » ஆரோக்கியம்
உடல் வலிமையிலிருந்து ஆண்மை அதிகரிப்பு வரை அனைத்தும் வழங்கும் ஆட்டுப்பால்
Boldsky | 20th Sep, 2018 05:40 PM
 • எலும்புகளின் ஆரோக்கியம்

  இதில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது, ஆனால் இதில் பசும்பாலை போல எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. அதனால்தான் இது மற்ற பால்களில் இருந்து தனித்துவமாக விளங்குகிறது. கால்சியத்துடன் சேர்த்து அமினோ அமிலமான ட்ரிப்டோபன்னும் இதில் அதிகம் உள்ளதால் இறகு நம்முடைய எலும்பு மற்றும் பற்களை வலுவாக்குகிறது. ஆட்டுப்பால் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு ஆஸ்டாபோர்ஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு


 • வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

  ஆட்டுப்பால் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எனவே நீங்கள் வேறு உணவுகளை சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை. ஒரு டம்ளர் ஆட்டுப்பால் குடிப்பது உங்களுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் பி, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தை வழங்குகிறது. இதில் உள்ள இரும்புசத்து உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.


 • நோயெதிர்ப்பு மண்டலம்

  நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடிய செலேனியம் ஆட்டுப்பாலில் அதிகளவு உள்ளது. இதனால் நோய்கள் அதிகம் தாக்காமல் இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும்.

  MOST READ: துரியோதனன் அர்ஜுனனுக்கு வழங்கிய அற்புத பரிசு


 • எதிர் அழற்சி பண்புகள்

  பசும்பாலை விட ஆட்டுப்பால் சிறந்ததென கூற முக்கியமான ஒரு பண்பு இதில் உள்ள எதிர் அழற்சி குணம்தான். இதில் உள்ள எதிர் அழற்சி குடல் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கங்களை குணபடுத்தக்கூடியது.


 • இதய ஆரோக்கியம்

  ஆட்டுப்பாலில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீராக்குகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, மேலும் இது இரத்த நாளங்களை தளர்வடைய செய்து கார்டியோவாஸ்குலர் அமைப்பை சீராக செயல்பட வைக்கிறது.


 • செரிமானம்

  இதில் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கொழுப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது, இதனால் ஆட்டுப்பால் எளிதில் செரிமானம் அடையக்கூடியது. இது வயிறை அடைந்தவுடன் அதிலுள்ள புரோட்டின்கள் வயிறை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும். இதனால் பசும்பால் குடித்தவுடன் ஏற்படும் எரிச்சல் ஆட்டுப்பால் குடித்தவுடன் ஏற்படாது.

  MOST READ: ஜெய்பூர் இளவரசியை மணக்கும் முன், 5 நடிகைகளுடன் அடிப்பட்ட ஸ்ரீசாந்த்!


 • மூளை ஆரோக்கியம்

  ஆய்வுகளின் படி ஆட்டுப்பாலில் உள்ள லிபிட்ஸ் பதட்டத்தை குறைக்க பயன்படுகிறது. மேலும் இதில் போதுமான அளவு லினோலிக் அமிலம் உள்ளது. இது மூளையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் ஆட்டுப்பால் குடிப்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள்.


 • அணிமியாவை தடுக்கிறது.

  அனிமியா எனப்படுவது உடலில் ஏற்படும் இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் நோயாகும். ஆட்டுப்பாலில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது மேலும் இது உடலை இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு ஏற்றது போல மாற்றவும் செய்கிறது. எனவே அனீமியாவை தடுக்க முடிந்தளவு ஆட்டுப்பால் குடியுங்கள்.


 • சரும ஆரோக்கியம்

  ஆட்டுப்பாலில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் இதிலுள்ள அல்கலைன் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தாது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு பொலிவை தருகிறது. காலை நேரத்தில் ஆட்டுப்பாலில் முகம் கழுவினால் அன்று நாள் முழுவதும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும்.

  MOST READ: பொது இடங்களில் கூச்ச, நாச்சமின்றி மக்கள் செய்த செயல்கள்... - புகைப்படத் தொகுப்பு!


 • ஆண்மை அதிகரிப்பு

  ஆட்டுப்பாலின் அற்புதமான பலன்களில் ஒன்று ஆண்மையை அதிகரிப்பதாகும். தொடர்ந்து ஆட்டுப்பால் குடித்துவந்தால் ஆண்களுக்கு இருக்கும் தாம்பத்யம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இது விறைப்புத்தன்மையை அதிகரித்து நீண்டநேரம் உறவில் ஈடுபட வழிவகுக்கும். சுருக்கமாக சொன்னால் இது ஒரு இயற்கை வயகரா போல செயல்படும்.
இயற்கை நமக்கு பல சத்தான உணவுகளை வழங்கியுள்ளது. இயற்கை உணவுகளுக்கும், அவற்றின் பயன்களுக்கும் எல்லையே இல்லை. நாம்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம். அப்படி அந்த வட்டத்துக்குள் நாம் ஆரோக்கியம் என நினைத்து பயன்படுத்தும் ஒரு பொருள் பால். பால் என்றால் நமக்கு தெரிந்தது பசும்பால் மற்றும் எருமைப்பால் அவ்வளவுதான். ஆனால் இதனை விட பலமடங்கு சத்துக்கள் நிறைந்தது ஆட்டு பால்.

உண்மைதான். பசும்பாலை விட ஆட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதன் மகத்துவம் தெரிந்ததால்தான் மகாத்மா காந்தி ஆட்டுப்பாலையே அதிகம் குடித்தார். இது கிடைப்பது சற்று கடினம்தான். ஆனால் சற்று சிரமப்பட்டு இதனை வாங்கி குடித்தால் இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த பதிவில் ஆடு பாலின் அற்புத பயன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்