Back
Home » ஆரோக்கியம்
இப்படி வந்தா சாதாரணமா விடாதீங்க... உயிருக்கே ஆபத்து... உடனே என்ன செய்யணும் தெரியுமா?
Boldsky | 21st Sep, 2018 11:46 AM
 • Urticaria என்றால் என்ன?

  Image Courtesy

  படையின் தோற்றம் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும்போது அல்லது ​​சில நேரங்களில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை நீடித்திருக்கும்போது, ​​இந்த நிலை "நாட்பட்ட Urticaria" என அறியப்படுகிறது. இதில் பொதுவாக, இரண்டு வகைகள் உள்ளன: 1)கடுமையான அல்லது குறுகிய கால தோற்றம் 2) நீண்ட கால தோற்றம், இது நாள்பட்டது.

  நோயாளிகளின் விரிவான வரலாற்றைப் படிப்பதைத் தவிர்த்து, முழுமையான பரிசோதனையை மேற்கொள்ளும் போதும், நீண்டகால இடியோபாட்டிக் Urticaria நோயைக் கண்டறியலாம்.


 • படை நோய்

  பெரும்பாலான நேரங்களில், இதுபோன்ற வழக்குகள் ஒரு வகை நோயெதிர்ப்புத் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில நேரங்களில் தைராய்டு நோய், முடக்கு வாதம், வகை 1 நீரிழிவு, செலியாகு நோய், ஹார்மோன் பிரச்சினைகள் அல்லது சில அரிதான நிகழ்வுகளில் புற்றுநோய்த் தோற்றங்களோடு தொடர்புடையதாக இருக்கலாம். நாள்பட்ட Urticaria - வைத் தடுக்க, நீங்கள் முக்கியமாக அதைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


 • என்ன செய்ய வேண்டும்?

  • நாட்பட்ட Urticaria வைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
  • அதன் அறிகுறிகள் என்ன?
  • நாள்பட்ட படை நோயின் குறிப்பிட்ட அறிகுறிகள்?
  • இது உயிருக்கு ஆபத்தானதா?
  • இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
  • இதை எவ்வாறு தடுப்பது?

  MOST READ: எலுமிச்சை சாறுக்கு பதிலாக சாத்துக்குடி சாறை முகத்திலும் தலையிலும் தடவுங்கள். ஏன் தெரியுமா?


 • காரணிகள்

  நாட்பட்ட Urticaria வைத் தோற்றுவிக்கும் பிரதான காரணிகளில் ஒன்று தன்தடுப்பாற்றல் (autoimmunity) ஆகும். எண்டோகிரைன் மற்றும் தன் தடுப்பாற்றல் நோய்கள் நாட்பட்ட Urticaria வின் நிகழ்வுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன - ஒரு சில பெயர்கள்: சிஸ்டிக் லூபஸ் எரிடேமடோசஸ், சிறுநீரக முடக்கு வாதம், ஆட்டோம்யூன் தைராய்டு நோய் மற்றும் கிரையோக்லோபுலினெமியா.

  சிறுநீர் பாதைத் நோய்த்தொற்றுகள், ஹெபடைடிஸ் மற்றும் வயிறு காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்கள் போன்ற பாக்டீரியா நோய்த்தொற்றுகள் நாட்பட்ட Urticaria வின் தூண்டுதல்களாகக் கருதப்படுகின்றன.


 • அரிக்கும் உணவுகள்

  • வேர்க்கடலை, மட்டி/கிளிஞ்சல் பூச்சி, முட்டை போன்ற உணவுகள்
  • பூச்சி கொடுக்குகள்
  • சில மருந்துகள் (ஆஸ்பிரின், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இபுபுரோஃபென்)
  • மகரந்தம்
  • பெட் டென்டர்
  • சில தாவரங்கள் (நச்சு ஓக்,நச்சு ஐவி)
  • சூரிய ஒளி
  • அதிகப்படியான குளிர் அல்லது வெப்பம்
  • மரப்பால்
  • இரத்தம் செலுத்துதல்.


 • அறிகுறிகள்

  இந்த சிவந்த படைகளின் அறிகுறிகள் சில நிமிடங்கள் தொடங்கி பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு நீடிக்கும். பார்ப்பதற்கு பூச்சிக்கடியைப் போன்று தோன்றும் இந்த Urticaria படைகள் கீழ்க்காணும் பல அறிகுறிகளைக் கொண்டுள்ளன,

  • படைகள் மிகவும் அரிப்புடன் கூடிய உயர்ந்த புடைப்புகள் போலத் தோன்றும். அவை சிவப்பு அல்லது தோல் நிறத்தில் இருக்கும்.
  • அவை வெளிரும் தன்மையைக் காட்டுகின்றன (அழுத்தும் போது படையின் மையம் வெள்ளையாக மாறும்).
  • புடைப்புகள் தெளிவான விளிம்புகளைக் கொண்டிருக்கும்.
  • உடலின் எந்தப் பகுதியிலும் படைகள் ஏற்படலாம்.
  • படைகள் வடிவத்தை மாற்றலாம், காணாமல் போகலாம் மற்றும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் தோன்றலாம்.
  • உங்கள் உடலின் பிற பகுதிகளுக்கும் அவை பரவ முடியும்.


 • உயிருக்கு ஆபத்தா?

  கடுமையான படைகள் உயிருக்கு ஆபத்தானவை என்று அழைக்கப்படாவிட்டாலும், தொண்டைக்குள் வீக்கம் இருந்தால், சுவாசத்தில் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது. அந்த சமயத்தில் உங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படலாம்.


 • சிகிச்சை முறைகள்

  சில நேரங்களில் இந்த நோயைக் குணப்படுத்துவது எளிதானது, குறிப்பாக நோய்த் தூண்டுதல் காரணி உணவாக இருந்தால். இருப்பினும், பிற காரணிகளை சோதனைகள் மூலமாக அடையாளம் காண வேண்டியது அவசியம். படைகள் ஒரு முறை மட்டுமே தோன்றும் நேரத்தில் இந்த மாதிரி சோதனைகளை செய்யவேண்டிய அவசியமில்லை.

  ஆயினும்கூட, படைகளை ஒரு தொழில்முறை மருத்துவ நிபுணர் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். உங்கள் ஒவ்வாமை அறிகுறியை அறியும் நிபுணர் உங்களின் சிறுநீர், தோல் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பலாம்.

  படையைத் தோற்றுவித்த காரணத்தைக் கண்டறிய முடியுமானால், நீங்கள் அந்தக் காரணியை விட்டு விலகி இருப்பது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.


 • என்ன செய்ய வேண்டும்?

  • படைகளை தோற்றுவிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
  • கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அடிக்கடி ஷவரில் குளிப்பதால் அரிப்பு உணர்வு குறையலாம். உடலை சுரண்டுவதைத் தடுக்கவும்.
  • இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.
  • படை குளிர்ந்த நீரால் உண்டாகும் போது குளிர்ந்த நீரில் நீந்துவதை தவிர்க்கவும். எப்போதும் எபிநெஃப்ரைன் ஆட்டோ இன்ஜெக்டரை எப்போதும் வைத்திருங்கள். குளிர் காலத்தில் ஸ்கார்ப்பை அணியுங்கள்.
  • வெளியேறும் போது சூரியன் ஒளியைத் தடுக்கும் சன் பிளாக்கை அணியலாம்.
  • உங்களுக்கு ஒவ்வாததாக இருக்கும் எந்தவொரு குறிப்பிட்ட மருந்தையும் கண்காணியுங்கள்.

  MOST READ: பில்லி சூன்யத்தில் பயன்படுத்தப்படும் வசிய மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?


 • மருந்துகள்

  ஆன்டிஹிஸ்டமைன்கள் படைக்கு சிகிச்சையளிக்கச் சிறந்தது. அதை நீங்கள் நேரடியாக அல்லது மருத்துவரின் பரிந்துரை மூலம் வாங்கலாம். இவை ஹிஸ்டமின் (ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும் இரசாயனம்) விளைவைத் தடுக்கின்றன.

  Antihistamines நீடித்த செயல் கொண்ட மருந்து. உங்கள் ஒவ்வாமை நிபுணர் வேறு மருந்துகளோடு Antihistamines களையும் பரிந்துரைக்கலாம். எனினும், இது நாள்பட்ட Urticaria என்றால் படையின் விளைவின் தீவிரத்தைக் குறைக்க நீங்கள் prednisone (ஒரு நோயெதிர்ப்பு மாடுலேட்டர்) கொண்ட ஒரு நீண்ட சிகிச்சை முறைக்கு உங்களை உட்படுத்த வேண்டும்.

  உங்களுக்கு சுவாசிப்பதில் தொல்லை என்றால், ஒரு எபினீஃப்ரைனை (அட்ரினலின்) தானாக உட்செலுத்துதல் பரிந்துரைக்கப்படலாம். நீங்கள் எல்லா நேரமும் இதை வைத்துக்கொள்ளலாம்.


 • எப்படித் தடுப்பது?

  எடுத்துக்காட்டாக, வேர்க்கடலை அல்லது முட்டைகள் போன்ற குறிப்பிட்ட உணவுகள் படை நோய் ஏற்படுவதை நீங்கள் அறிந்திருந்தால், இந்த பொருள்களைக் கொண்டிருக்கும் எதையும் சாப்பிடக்கூடாது.

  முதன் முதலில் உங்கள் உடம்பில் எழும் ஒவ்வாமை அறிகுறிகளுக்கேற்ப உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நினைவில் கொள்ளுங்கள் .அது உங்கள் எதிர்காலத்தில் தோன்றும் படைகளைத் தடுக்க உதவும்.

  உங்கள் வாழ்நாளின் எளிய மாற்றங்கள் கூட படை திரும்பத் தோன்றுவதை தடுக்க உதவியாக இருக்கலாம். ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்கவும். உங்களுக்கு படையை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்கொள்ளப் பழகுங்கள் அது எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் படைகளை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்புகளைக் குறைப்பதில் உதவலாம்.
சுமார் 20 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளின் எதோ ஒரு கட்டத்தில் இந்த Urticaria எனப்படும் படை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதன் நிகழ்வுகளைத் தூண்டக்கூடிய பலவித சூழ்நிலைகள் மற்றும் நிறைய பொருட்கள் உள்ளன.

தோலில் ஒரு அரிக்கும் தோலழற்சியின் வடிவத்தில் முதலில் படை தோன்ற ஆரம்பிக்கிறது, பின்னர் அது சிவந்த புண்ணாக ஒரு வட்ட வடிவத்தைப் பெறுகிறது.

   
 
ஆரோக்கியம்