Back
Home » ஆரோக்கியம்
நாம் சாப்பிடும் தேன் சைவமா..? அசைவமா..? விடை தெரிஞ்சிக்க இதை படிங்க..
Boldsky | 21st Sep, 2018 03:49 PM
 • தேனீக்களின் உலகம்..!

  மனிதர்களின் அன்றாட செயல்களை போன்ற தேனீக்களும் தனது செயலை செவ்வனே செய்து வருகிறது. தேனீக்கள் மிகவும் சாதுவான உயிரினம். இவை தனது தேன் உற்பத்தி செய்யும் வேலையை மிக பிரமாதமாக செய்து வருகிறது. இந்த தேனில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் உள்ளன. நீண்ட நாட்கள் கெட்டு போகாத உணவு பொருட்களில் தேன் தான் முதல் இடத்தில் உள்ளது.


 • மகத்துவம் பெற்ற தேன்..!

  தேனீக்கள் மிகவும் கடினப்பட்டு தயாரிக்கும் தேனில் பல வகையான சத்துக்கள் இருக்கிறது. நம் முன்னோர்கள் கூட தேனை இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காக பயன்படுத்தி வந்தனர். ஒரு கப் தேனில் உள்ள சத்துக்கள் இதோ...
  கலோரிகள் 1031
  கால்சியம் 20.3 mg
  மெக்னீசியம் 6.8 mg
  இரும்புசத்து 1.4 mg
  பொட்டாசியம் 176 mg
  பாஸ்பரஸ் 13.6 mg
  சோடியம் 13.6 mg
  செலினியம் 2.7 mcg


 • ஐன்ஸ்டீன் சொன்னது தெரியுமா..?

  உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் முதன்மையானவராக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள், தேனீக்களை பற்றி ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளார். அது என்னவென்றால், தேனீக்கள் இந்த உலகை விட்டு மறைந்து விட்டால், மனிதன் இந்த உலகில் வெறும் நான்கே ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என கூறியுள்ளார்.


 • காரணம் என்ன..?

  ஐன்ஸ்டீன் இவ்வாறு கூற காரணம், தேனீக்கள் இல்லாத உலகில் பூக்களிடம் மகரந்த சேர்க்கை நடைபெறாது. மகரந்த சேர்க்கை நடைபெற வில்லையென்றால் அது செடிகளின் வாழ்வியலை முற்றிலுமாக பாதித்து விடும். பின்னர், விலங்குகள், மனிதர்கள் என நம் அனைவரும் இதில் பாதிக்கப்பட்டு உயிர்களே இல்லாத பூமியாக மாறி விடுமாம்.

  MOST READ: விந்தணு குறைபாடு உள்ளவர்கள் தொப்புள் கொடி முறையின் மூலம் குணப்படுத்தலாம்..!


 • தேனீக்களின் வேலை முறை...

  தேனீக்களில் 20,000 வகையான தேனீ இனங்கள் உள்ளன. பொதுவாக தேனீக்களின் முக்கியமாக கருதப்படுவது இந்த வேலைக்கார தேனீதான். இதுதான் எல்லா பூக்களிடமும் சென்று தேனை சேகரித்து கொண்டு வரும். மேலும், இவையே மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும். இவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கும் இந்த ராணி தேனீக்கள்.


 • தேன் அசைவமா..?

  பொதுவாக ஒரு உயிரினத்தில் இருந்து எடுக்க படும் சில உணவுகளை அசைவம் என்றே கூறுவார்கள். எடுத்துக்காட்டாக பசுவிடம் இருந்து பால் எடுக்கப்படுவது போன்று. அந்த வகையில் தேனையும் அவ்வாறே பெறுகின்றோம். எனவே, இது அசைவம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உள்ளது.


 • தேன் Vegan-ஆ..?

  விலங்குகளிடம் இருந்து பெறப்படும் எந்த பொருளையோ உணவையோ ஒருவர் பயன்படுத்தினாலோ சாப்பிட்டாலோ, அவர் Vegan இல்லை. ஆனால், ஒரு சில Vegan என்று சொல்பவர்கள் தேனை சாப்பிட்டுத்தான் வருகின்றனர். இது பசுவிடம் இருந்து பாலை குடிப்பது போன்றுதான்.


 • வேட்டையாட படும் தேனீக்கள்..!

  எவ்வாறு தோளிற்காக நாம் பாம்பு, மான், மாடு போன்ற ஜீவ ராசிகளை கொன்று குவிக்கிறோமோ அதே போன்று இந்த தேனீக்களையும் வாழ விடாமல் செய்து வருகின்றோம். தேனை எடுப்பதற்காக நாம் அதன் மீது நெருப்பை செலுத்தி அவற்றை கொன்று விட்டு, அவைகளில் தேனை நாம் எடுத்து கொள்கின்றோம். இதற்கு மாறாக தேனீக்களின் வளர்ப்பின் மூலம் நாம் தேனை நல்ல முறையில் பெறலாம்.

  MOST READ: முதலிரவன்று நடந்த 'வேற' சமாச்சாரங்கள் - 7 இந்திய பெண்கள் பகிர்ந்த உண்மை நிகழ்வுகள்!


 • அப்போ தேன் சைவமா..?

  இறுதியான முடிவு என்னவென்றால், தேன் சுத்த சைவ பொருளாம். ஏனெனில் இதில் எந்த வித ரத்தம் சார்ந்த மூல பொருட்கள் கிடையாது. அதே போன்று இதில் எந்த திசுக்களும் இல்லை. எனவே, தேனானது சுத்த சைவம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


 • தேனீக்கள் வளர்ப்பு..!

  இப்போதெல்லாம், தேனீக்களின் வளர்ப்பே மிகவும் பிரபலம் ஆகி கொண்டே வருகிறது. தேனீக்கள் வளர்த்தல் நல்ல லாபத்தையும் தருகிறது. அத்துடன் இவை எந்த வகையிலும் தேனீக்களை பாதிக்காதவாறு செய்யபடுகிறது. இதன் மூலம் பெறப்படும் தேனானது மிகவும் சுத்தமானதாக உள்ளதாம். இது போன்று தேனீ வளர்ப்பை நாமும் பின்பற்றி அவற்றின் நலனை பாதுகாப்போம்.


  இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனி மகத்துவம் உள்ளது. சிறு பூச்சி முதல் பெரிய டைனோசர்கள் வரை எல்லாவற்றிருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. இங்குள்ள எல்லா உயிரினமும் உணவு சங்கிலியின் மூலமே இயங்கி கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று சீர்குலைந்தாலும் அவை முழு இயக்கதையும் மாற்றி அமைத்து விடுமாம். மேலும், இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் இது தடை செய்து விடும்.

அந்த வகையில் தேனீக்களும் மிக முக்கிய பங்கை இந்த பூமியில் வகிக்கிறது. தேனீக்களே மகரந்த சேர்க்கை நடைபெற மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்த பூமியில் தேனீக்கள் இல்லையென்றால் விரைவில் உலகம் அழிய கூடுமாம். இத்தகைய மகத்துவம் பெற்ற தேனீக்கள் சைவமா..? அசைவமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். இதற்கான விடையே இந்த பதிவு.

   
 
ஆரோக்கியம்