Back
Home » ஆரோக்கியம்
வயசு கூடினால் இப்படியெல்லாம் கூட நடக்குமா...!? பொய்மையும்- மெய்மையும்
Boldsky | 24th Sep, 2018 04:44 PM
 • கட்டுக்கதை #1

  வயதானால் தாம்பத்தியம் வைத்து கொள்ள முடியாது.

  உண்மை :-
  வயதாவதால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தே. 57 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் தாம்பத்தியம் வைத்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது அவரவரின் விருப்பத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.


 • கட்டுக்கதை #2

  பழைய கால நிகழ்வுகளை மறந்து விடுவார்கள்

  உண்மை :-
  நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை வயதானலும் நாம் கண்காணித்து வருவோம். புதிய விஷயத்தை நினைவு கொள்வதே வயதானால் கடினமாக இருக்கும். ஆனால், பழைய கால நினைவுகளை அப்படியே மனதில் பதிய வைத்து கொள்வோமாம்.


 • கட்டுக்கதை #3

  ஆழ்ந்த அறிவு கூர்மை குறைந்து விடும்.


  உண்மை :-
  வயதானால் புத்தி கூர்மை குறைந்து விடாது. இன்றும் பல வயதானவர்கள் ஸ்மார்ட் போன் போன்ற சாதனைகளை இளைஞர்களை விட மிக பிரமாதமாக பயன்படுத்துகின்றனர்.


 • கட்டுக்கதை #4

  வயதாவதை கண்டு பெண்கள் பயப்படுகின்றனர்.

  உண்மை :-
  இது உண்மையில் தவறான புரிதல். பெண்கள் வயதாவதை கண்டு பயபடுவதில்லையாம். வயதான தோற்றம் அவர்களை மனதளவில் மென்மையானவராக மாற்றுகிறது என ஆய்வுகள் கூறுகிறது. வயதாவதை நல்லெண்ணத்துடனே அவர்கள் எடுத்து கொள்கின்றனர்.

  MOST READ: சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய முன்னோர்களின் முறைகள் பற்றி தெரியுமா..?


 • கட்டுக்கதை #5

  வயதானால் ஞாபக சக்தி குறைந்து விடும்

  உண்மை :-
  பொதுவாக ஏதேனும் மருத்துகளை எடுத்து கொண்டாலே இது போன்ற பிரச்சினைகள் வர தொடங்கும். ஆனால், நமக்கு வயதாவதால் மறதியும் வந்து விடாது. இது டெமென்டியா போன்ற ஒரு சில முக்கிய நோய்களால் மட்டுமே நிகழ கூடும்.


 • கட்டுக்கதை #6

  வயது கூட கூட மன அழுத்தம் அதிகமாகி கொண்டே போகும்.

  உண்மை :-
  இது தவறான தகவலாகும். வயசு கூடுவதால் நமக்கு மன அழுத்தம் எல்லோருக்கும் வருவதில்லை. மாறாக இது வயதின் ஒரு அங்கம் கிடையாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது அவரவரின் வாழ்க்கை சூழலை பொறுத்தே மாறுபடுமாம்.


 • கட்டுக்கதை #7

  வயதானாலே எல்லோருக்கும் நோய்கள் ஏற்படும்.


  உண்மை :-
  நமக்கு வயதானால் பல்வேறு நோய்கள் வரும் என்றில்லை. இது ஒருவரின் எதிர்ப்பு சக்தியையே பொறுத்தது. வயது மிக முக்கிய விஷயமாகும். நமக்கு வயது கூடினால் நம் உடலின் செயல்பாடு நின்றிவிடும் என்பதில்லை.


 • கட்டுக்கதை #8

  வயதாவதை தடுப்பதற்கு மருந்துகள் உண்டு

  உண்மை :-
  ஒரு சில இயற்கை ரீதியான விஷயங்களை நாம் மாற்ற இயலாது. இது வரை வயதாவதை தடுக்க கூடிய எந்த ஒரு மருத்துக்களும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை. இதை பற்றிய ஆய்வுகள் இன்றளவும் நிலுவையில் உள்ளது.

  MOST READ: ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!


 • கட்டுக்கதை #9

  நமக்கு வயதானால் மட்டுமே முடிகள் நரைக்க கூடும்

  உண்மை :-
  பெரும்பாலானோர் நரையை பற்றி மிகுந்த கவலை படுகின்றனர். அதாவது, முடிகள் நரைத்து போக வயது ஒரு காரணம் கிடையாது. உடலில் மெலனின் சுரப்பி கம்மியாக சுரந்தால் இந்த பிரச்சினை ஏற்படும். இதற்கு வயது ஒரு முழு காரணி கிடையாது.


 • கட்டுக்கதை #10

  உடல் உறுப்புகள் வயதாக வயதாக செயல் இழந்து விடும்.

  உண்மை :-
  பொதுவாக நாம் உடலின் தன்மையை வைத்தே நமது ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. இது வயதை வைத்து சொல்லப்படுவதில்லை. வயது கூடினாலும், நமது ஆரோக்கியமே நமது செயல்பாட்டை குறிக்கிறது. உண்ணும் உணவும், அன்றாட பழக்க வழக்கங்களும் சீராக இருந்தால் நலமுடன் நீண்ட நாட்கள் இளமையாக வாழலாம்.

  இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து நாம் வாங்கலாம். ஆனால், ஒன்றை மட்டும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது. அது என்னவாக இருக்கும்னு யோசிக்கிறீரங்களா..? அதுதாங்க "நேரம்". ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்த நேரம்தான். ஒரு முறை இதை இழந்து விட்டால் மறு முறை நேரத்தை நம்மால் வாங்க முடியாது. அந்த வகையில் ஒருவரின் வயதும் அப்படித்தானே.

காலங்கள் மெல்ல மெல்ல நகர, வயதும் கூடி கொண்டே போகும். நம்மில் பலர் வயதாவதை பற்றி மிகவும் தவறான கண்ணோட்டத்தை வைத்து கொண்டுள்ளோம். இந்த பதிவில் வயதாவதை பற்றி நாம் தவறாக புரிந்து கொண்டுள்ள சில முக்கிய விஷயங்களையும் உண்மைகளையும் நாம் அறிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்