Back
Home » ஆரோக்கியம்
புகைப்பழக்கம் இருந்தாலும் உங்களின் நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ள இதை செய்யுங்க...
Boldsky | 24th Sep, 2018 05:21 PM
 • முக்கிய உறுப்பு...

  நமது உடலில் உள்ள சில முக்கிய உறுப்புகளில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த நுரையீரல்தான். இதயம், மூளை, கண்கள் போன்ற சில முக்கிய உறுப்புகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த நுரையீரலும் முக்கியமானதாகும். நாம் செய்ய கூடிய ஒரு சில செயல்கள் தான் நமது நுரையீரலை பாதிக்க செய்து செயலிழக்க வைக்கிறது.


 • புகையும் படலமும்..!

  இந்த நுரையீரலானது மிக மெல்லிய படலமாகும். நமது உயிர்மூச்சை சுவாசிக்க வைப்பதே இதுதான். பல்வேறு உடல் சார்ந்த செயல்களில் நுரையீரலின் பங்கு இன்றியமையாததாகும். இத்தகைய சிறப்புமிக்க ஒரு உறுப்பை புகை பிடிப்பதன் மூலம், நாம் முற்றிலுமாக சிதைத்து கொண்டு வருகின்றோம்.


 • சுத்தம் செய்ய முடியுமா..?

  நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ள ஒரு சில எளிய வழிகள் உள்ளன. அதிலும் இந்த முறைகள் நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவை. இதனை சுத்தம் செய்வதால் உடலுக்கு சுத்தமான காற்று பெறபடும். அதிகமாக புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இது நல்ல பயனை தரும்.


 • கார்டியோ

  இது ஒரு சிறந்த முறையாகும். தினமும் கார்டியோ- வை செய்து வந்தால் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். எனவே, இது தானாகவே நுரையீரலை சீராக்கி விடும். கார்டியோ என்பது இதயத்தின் துடிப்பை அதிகரிக்க உதவும் ஒரு பயிற்சியாகும். மேலும், இதனை ஓட்ட பயிற்சி மூலமாகவும், ஜிம் சாதனங்கள் மூலமாகவும் செய்து வந்தால் நுரையீரல் குணமாகும்.

  MOST READ: சர்க்கரை நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்...


 • உயர ஏறுதல்

  நுரையீரலின் செயல்திறனை செம்மைப்படுத்துவதில் இந்த மலை ஏறும் பயிற்சி நன்கு உதவும். உயரமான இடத்தில் ஏறுவதன் மூலம் நுரையீரலுக்கு அதிக படியான ஆக்சிஜன் கிடைக்கும். எனவே, இது நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும். எனவே மலை ஏற்றம், ட்ரெக்கிங் போன்றவற்றை செய்து வாருங்கள்.


 • பிராணாயாமம்

  உடலில் இருக்க கூடிய 7 சக்கரைத்தையும் சீராக வைத்து கொள்ள இந்த யோகா உதவும். குறிப்பாக மீசை மெல்ல இழுத்து வெளிய விடும் இந்த ஆசன நிலை அதிக நலனை தர கூடியதாகும். இதனால், நுறையீரல் நன்கு சுருங்கி விரிந்து, சீராக வேலை செய்யுமாம். எனவே, பிராணாயாமம் போன்றவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நண்பர்களே.


 • கிவி பழம்

  உண்ணும் உணவில் சத்தான பழங்களை சேர்த்து கொண்டால், அதுவே உடலில் முக்கால் வாசி பிரச்சினைக்கு வழி வகுக்கும். அந்த வகையில் கிவி பழம் நுரையீரலுக்கு நன்கு உதவும் என ஆய்வுகள் சொல்கிறது. ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர் இந்த கிவியை சாப்பிட்டு வந்தால் விரைவில் நலம் பெறலாம்.


 • நீச்சல்

  உங்களுக்கு நீச்சல் அடிக்கும் பழக்கம் இருந்தால் நுரையீரல் சார்ந்த எந்த பிரச்சினையும் ஏற்படாது. நீந்துவதால் நுரையீரல் நன்கு செயல்பட தொடங்கும். நுரையீரலுக்கு சீரான அழுத்தத்தை தந்து அவற்றின் வேலையை இது சீராக வைக்கிறது. மேலும், மூச்சு பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வு.

  MOST READ: ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!


 • சுவாச இசை கருவிகள்

  இசை கருவிகள் என்றாலே அவை பலருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் இருக்கும். நுரையீரலின் செயல்திறனை நன்றாக வைத்து கொள்ள ஒரு சில முக்கிய இசை கருவிகள் உதவுகிறது. புல்லாங்குழல், சாக்சாபோன், மவுத்ஆர்கன் போன்றவை மிக சிறந்த வகையில் நுரையீரலின் வெளிப்பாடை செய்யும்.


 • காற்று எப்படி..?

  பொதுவாக சுத்தமாக காற்று இல்லையென்றாலும் நுரையீரல் பாதிக்கபடும். வெளியில் செல்லும்போது மூக்கை மறைக்க கூடிய துணியை கட்டி கொண்டு செல்வது நன்றே. ஏனெனில், சுவாச பிரச்சினைகள் பலவும் இந்த சுத்தமற்ற காற்றினாலே ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கிறது.


  இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
இன்று உலக மக்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள மிக மோசமான ஒன்று புகை பழக்கம் தான். ஒரு நாள் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். புகை பிடித்தால் சில வகையான மாயை அவர்களுக்கு ஏற்பட்டு, ஒரு வித மயக்கத்தை அடைகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தான், இன்று எண்ணற்ற சிறு வயதினரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு விரைவிலே மரணத்தை அடைந்து விடுகின்றனர். நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ள சில முக்கிய வழிகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்