Back
Home » ஆரோக்கியம்
விராட் கோலி இப்போ புதுசா மாறியிருக்கிற டயட் இதுதான்... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே
Boldsky | 11th Oct, 2018 01:35 PM
 • டயட் பின்பற்றுமே் பிரபலங்கள்

  இந்த டயட்டில் அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் நம் விராத் கோலி மட்டுமில்லைங்க செரீனா வில்லியம்ஸ், லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஹெக்டர் பெல்லரின் போன்ற வீரர்களும் இந்த வேகன் டயட் முறையை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த தாவர உணவு வகை முறை கிரிக்கெட் வீரரின் குணாம்சத்தை மாற்றி அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்பொழுது எல்லாம் அவர் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களுக்கு பதிலாக புரத உணவுகள், சோயா மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்கிறார்.

  MOST READ: பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்?


 • விளையாட்டு திறனில் மாற்றம்

  இந்த வேகன் டயட் முறை என்னுடைய விளையாட்டு திறனை நன்றாகவே மேம்படுத்தி உள்ளது. நீங்கள் விளையாட்டு வீரராக மற்றும் விளையாட்டு வீரராக இல்லாமல் இருந்தால் கூட இது உங்கள் உடல் எடை குறையீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

  நீங்கள் ஒல்லியாக மிகவும் வலிமை வாய்ந்து காணப்பட விரும்பினால் இந்த வேகன் டயட்டில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்து முறைகளை சேர்த்து கொள்ளுங்கள்.


 • புரோட்டீன்

  புரோட்டீன் ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது தான் நமது உடல் தசைகளை கட்டமைக்கவும் வலிமைபடுத்தவும் உதவுகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் அதிகளவில் புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தசைகளில் ஏற்படும் பாதிப்பை போக்கி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  உங்களுக்கு வலிமையான தசைகள் கிடைக்க நினைத்தால் புரோட்டீன் உணவுகளான நட்ஸ், நட் பட்டர், விதைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், டோஃபு, சோயா பால், முழு தானியங்கள், புரோட்டீன் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

  MOST READ: சிலந்தி கடித்துவிட்டால் விஷம் ஏறுமா? உடனே என்ன செய்ய வேண்டும்?


 • விட்டமின் பி12

  ஆரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி செய்த ஆராய்ச்சி படி பார்த்தால் விளையாட்டு வீரர்களுக்கு விட்டமின் பி பற்றாக்குறை இருந்தால் உடற்பயிற்சி செய்ய திறன் இல்லாமல் இருத்தல், தசைகள் பாதிப்படைதல், தசைகளின் அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன என்கின்றனர். மேலும் விட்டமின் பி12 பற்றாக்குறை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சோர்வை உண்டாக்குகிறது. இதனால் அவர்களால் விளையாட்டில் சரிவர ஜொலிக்க முடியாமல் போகிறது.
  இந்த விட்டமின் பி 12 சைவ உணவுகளான சோயா, பாதாம் பால், அரிசி, புரோட்டீன் உணவுகள், தானியங்கள், பீன்ஸ் போன்றவற்றில் உள்ளது.


 • கால்சியம்

  விளையாட்டு வீரர்களுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. அதிலும் குறிப்பாக பெண் வீராங்கனைகளுக்கு வலிமையான எலும்புக்கும் பற்களுக்கும் இது தேவை. ஏனெனில் இது தான் தசைகளின் சுருக்கத்திற்கும் நீட்சிக்கும் உதவுகிறது. இந்த கால்சியம் தான் தசை நார்கள் வழியாக பம்ப் ஆகி உள்ளே சென்று தசைகளின் சுருக்கத்திற்கும், தசை நார்கள் வழியாக வெளியேறி தசைகளின் நீட்சிக்கும் உதவுகிறது.

  எனவே கால்சியம் பற்றாக்குறை இருந்தால் தசைகளில் இழுப்பு மற்றும் பிடிப்பு ஏற்படுகிறது. கால்சியம் உள்ள உணவுகளாவன : தாவர வகை பால் உணவுகள், டோஃபு, கால்சியம் அடங்கிய ஜூஸ், பச்சை காய்கறிகள், பிரக்கோலி.சளையாட்டு வீரர்கள் வெளியே விளையாண்டால் போதுமானது. சூரியனிடமிருந்து விட்டமின் டி கிடைத்து விடும். விட்டமின் டி அடங்கிய உணவுகளாவன :கீரைகள், சோயா பீன்ஸ், கோலார்டு கீரைகள்.


 • இரும்புச் சத்து

  நமது உடல் செல்களுக்கு போதுமான ஆற்றல் முதலில் கிடைத்தால் தான் நம்மளால் சுறுசுறுப்பாக விளையாட முடியும். போதுமான இரும்புச் சத்து தான் நமது உடற் செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக வியர்க்கும் போது இரும்புச் சத்து வெளியேறி விடுவதால் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

  MOST READ: தினமும் 3 துண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?


 • வைட்டமின் டி

  அதேபோல், வைட்டமின் டி பற்றாக்குறையால் உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க முடிவதில்லை. இரும்புச் சத்து அடங்கிய உணவுகள் பெரும்பாலனவற்றில் வைட்டமின் டியும் இருக்கின்றன. குறிப்பாக, அடர்ந்த பச்சை காய்கறிகள், கீரைகள், பயிறு வகைகள், பருப்பு வகைகள், நட்ஸ், கொடி முந்திரி ஆகியவற்றில் இவை அதிகம்.

  MOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க


 • விளையாட்டு வீரர்களுக்கான டயட் முறைகள்

  காலை உணவு : வெஜிடபிள் சான்ட்விச் உடன் 4-5 பாதாம் பருப்பு, ப்ளாக் காபி
  மதிய உணவு :1 சப்பாத்தி உடன் காய்கறிகள் கலவை, பருப்பு, பிரக்கோலி சாலட்
  மாலை உணவு :ஆப்பிள், கிவி, வாழைப்பழம், க்ரீன் டீ மற்றும் அரிசி உணவு
  இரவு உணவு :1 சிறிய பெளலில் பழுப்பு அரிசி சாதம், வெஜிடபிள் சூப், பிரக்கோலி /வெஜிடபிள் சாலட்.
நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராத் கோலி தற்போது வேகன் டயட் என்ற புதிய முறையை பயன்படுத்தி வருகிறார். இந்த டயட் ஆரோக்கியத்தை தருவதோடு தன்னுடைய விளையாட்டுத் திறனுக்கும் துணையாக இருக்கிறது என்கிறார் விராத் கோலி அவர்கள்.

அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறியது என்னுடைய உடல் வலிமையை அதிகரிப்பதோடு நல்ல சீரண சக்தியையும் தருகிறது.

   
 
ஆரோக்கியம்