Back
Home » பயணம்
காதல் மொழி பேசும் கௌப் கடற்கரைக்கு ஒரு முறையேனும் செல்லுங்கள்!
Native Planet | 2nd Nov, 2018 06:29 PM
 • எங்கேயுள்ளது?

  மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்த கடற்கரையை ஒட்டி மேற்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சுற்றுலா செல்வதற்கு வசதியாக இது உடுப்பியிலிருந்து 12 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது ஒரு விசேஷமாகும்.


 • சூரிய குளியல்

  கடலில் நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் கூட இது ஏற்ற கடற்கரையாகும்.இந்த கடற்கரை ஸ்தலத்துக்கு உடுப்பியிலிருந்து எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். இங்கு ஒரு பாழடைந்த ஜைனக்கோயிலும் உள்ளது.

  PC : Subhashini Panigrahi


 • கலங்கரை விளக்கம்

  கடற்கரையில் 27.12 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்கமும் உள்ளது. இந்த கடற்கரையை ஒட்டி ஒரு பழைய கோட்டையின் இடிபாடுகளும், மாரியம்மா கோயிலும் உள்ளது. இந்த பீச்சுக்கு எப்போதும் எந்த நேரத்திலும் செல்லலாம்.

  PC : Vinay bhat


 • விஷ்ணு கோவில்

  கௌப் ஜனார்த்தனஸ்வாமி கோயில் கௌப் பிரதான சாலையில் உடுப்பியில் அமைந்துள்ளது. ஜனார்த்தனா என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணு கடவுளுக்காக இந்த கோயில் அமைந்துள்ளது. 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோயில் புராதனமான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

  Subhashish Panigrahi.


 • கௌப் கடற்கரைக்கு வாருங்கள்

  விமானம் மூலமாக பயணிக்க விரும்புபவர்களுக்கு சென்னையிலிருந்து உடுப்பிக்கு இரண்டு இடைநில்லா விமானங்கள் உள்ளன.

  ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் 2600 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றன. நவம்பர் மாத இறுதியில் திட்டமிடுங்கள்.

  மதுரையிலிருந்து நேரடி விமான சேவை இல்லை என்றாலும், இணைப்பு விமானங்கள் இருக்கின்றன. 6 மணி நேரத்தில் பயண நேரம் ஆகிறது.

  அதுபோல கோயம்புத்தூரிலிருந்தும் இணைப்பு விமானங்கள் இருக்கின்றன. 7 மணி நேரப் பயணத்தில் உடுப்பியை அடையலாம்.


 • ரயிலில் பயணிக்க விரும்புவோர்

  கோவையிலிருந்து கிளம்பும் பிகானேர் விரைவு வண்டி மதியம் 3.20 மணிக்கு கிளம்பும். உடுப்பியை இரவு 12 மணிக்குள் சென்றடையும். மொத்தம் 8.20 மணி நேர பயணம்.

  திருநெல்வேலியிலிருந்து உடுப்பிக்கு நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி, 7.10 மணி மற்றும் 7.55 மணிக்கு என மூன்று ரயில்களும், மதியம் 1.45 மணிக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.


 • கவலையை விடுங்க.. பைக்கில் பறங்க

  பைக் ஓட்டப்பிரியரா நீங்கள். கவலையே வேண்டாம்.. பெங்களூருவிலிருந்து ஒரு பைக் ரைடிங் உடுப்பி வரை சென்று வரலாம்.

  ரஸ்க் சாப்பிடுவது போல் ரிஸ்க் எடுப்பதை நினைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சரியான வேட்டை ஆரம்பம். வாருங்கள் இதோ நம் பயண திட்டம்.

  பெங்களூரு - மைசூரு
  மைசூரு - மடிக்கேரி
  மடிக்கேரி - உடுப்பி

  மொத்த தூரம் 456 கிமீ ஆகும். மொத்த பயண நேரம் நம் நிறுத்தங்களையும் வேகமான செயல்பாடுகளையும் பொறுத்தது. வாருங்கள் பயணிக்கலாம்.


 • திட்டமும் செயலும்

  பெங்களூருவிலிருந்து மைசூர் 151 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வழியில் ராமநகரா, மத்தூர் ஆகிய இடங்களில் சிறிய இடைவேளை எடுத்துக்கொள்வோம்.

  மத்தூர் வடையும், ஸ்ரீரங்கப்பட்டினா பொம்மைகளும் வெகு பிரபலம்.

  மைசூரிலிருந்து உடுப்பி 306 கிமீ தூரம் இருக்கும். வழியில் பைலாக்குப்பே, சுலிலா, புட்டூர் ஆகிய இடங்களில் இடைவேளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மங்களூரு சென்றும் அல்லது போகாமலும் உடுப்பியை அடையலாம்.
கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரையாகும். குளுமையான சூழலுக்கும் அமைதியான சுற்றுப்புறத்துக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கடற்கரை பசுமையான இயற்கைச் சூழல் சுற்றிலும் இருக்க எழில் நிறைந்து காணப்படுகிறது. இங்கு வீசும் குளுமையான காற்று நமக்கு புத்துணர்ச்சியூட்டுவதால் இது அனைவராலும் விரும்பப்படும் இயற்கை எழில் நிறைந்த கடற்கரையாக கருதப்படுகிறது. சரி வாருங்கள் ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்