Back
Home » ஆரோக்கியம்
அமிர்தவல்லி இலை பார்த்திருக்கீங்களா? இதுதான் பூலோக அமிர்தமாம்... எதுக்குலாம் சாப்பிடலாம்?
Boldsky | 12th Jan, 2019 12:45 PM
 • அமிர்தவல்லி

  "கிலோயின் தண்டு அதிகபட்ச பயன்பாடு தருகிறது, இதன் வேரையும் பயன்படுத்தலாம். இதன் நன்மைகள் மற்றும் பயன்கள் எஃப்.டி.ஏ(FDA) (உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன "என ஊட்டச்சத்து நிபுணர் அன்சுல் ஜெய்பரத் கூறுகிறார். டாக்டர் அசுத்தோஷ் கவுதம் & பைத்தியநாத் "இதை சாறு, தூள் அல்லது காப்ஸ்யூல்கள் வடிவத்தில் உட்கொள்ளலாம்" எனக் கூறுகிறார்கள் . இந்த மூலிகைத் தாவரத்தின் நன்மைகளைப் பற்றி அறியுங்கள்.

  MOST READ: திடீர்னு பரவும் குரங்கு காய்ச்சல் எனும் காட்டுநோய்... இந்த அறிகுறி வந்தா ஜாக்கிரதையா இருங்க


 • நோய் எதிர்ப்பு சக்தி

  "கிலொய் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உலகளாவிய மூலிகை ஆகும்" என டாக்டர் அசுத்தோஷ் கூறுகிறார். இது ப்ரீ ரேடிக்கல்ஸ்களுடன் போராட உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை இயற்கையாகவே பெற்றுள்ளது, அதனால் உங்கள் செல்களை ஆரோக்கியமாக வைத்து நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. கிலொய், நச்சுத்தன்மையை அகற்றி, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது, நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுடன் சண்டையிடுகிறது, கல்லீரல் நோய்களையும், சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் கட்டுப்படுத்துகிறது."கிலொய் இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வல்லுனர்களால் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கருவுறாமைக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கிறது".


 • நாள்பட்ட காய்ச்சலை

  "கிலொய் மீண்டும் மீண்டும் தோன்றும் காய்ச்சலை அகற்ற உதவுகிறது. இது இயற்கையிலேயே உடல் வெப்பத்தணிப்பிற்கு (anti-pyretic) உதவும் என்பதால் டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற பல வாழ்க்கை அச்சுறுத்தல்களின் அறிகுறிகளையும் குறைக்க முடியும்" என டாக்டர் அஷுடோஷ் கௌதம், பைத்தியநாத்தும் கூறுகிறார்கள் .


 • செரிமானம் அதிகரிக்க

  "செரிமானத்தை மேம்படுத்த மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கிலொய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார் டெல்லி சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அன்சுல் ஜெய்பாரத். உதவிக்குறிப்பு: அரை கிராம் சீந்தில் பவுடரை சிறிது நெல்லிக்காய் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதால் அதன் மருத்துவ விளைவு அதிகரிக்கிறது. இதை மலச்சிக்கலைக் குணப்படுத்துவதற்காக வழக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.


 • நீரிழிவை குணப்படுத்த

  ஃபோர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் மனோஜ் கே. அஹுஜாவின் கூற்றுப்படி, "சீந்தில் இரத்தச் சர்க்கரை குறைப்பானாக செயல்பட்டு நீரிழிவு நோயைக் (குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு) குணப்படுத்த உதவுகிறது." கிலொய் சாறு அதிக அளவு இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதிசய முடிவுகளைத் தருகிறது.

  MOST READ: என்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா?... இப்படி செய்ங்க... நாள் பூரா மணக்கும்


 • மன அழுத்தம்

  சீந்திலை ஓரு அழுத்த எதிர்ப்பு (adaptogenic) மூலிகையாகப் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இது மன அழுத்தம் மற்றும் கவலைகளைக் குறைக்க உதவுகிறது. இது, நச்சுகளைக் குறைக்க உதவுகிறது ,நினைவாற்றலை அதிகரிக்கிறது, உங்களை அமைதியாக மாற்றுகிறது. மற்ற மூலிகைகளுடன் இணைந்து ஒரு சிறந்த சுகாதார டானிக்காக வேலை செய்கிறது.


 • சுவாசப் பிரச்சனைகளுக்கு

  டாக்டர் அசுத்தோஷ் மேலும் கூறுகையில், "கிலோய் அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்கு பிரபலமாக அறியப்படுகிறது மற்றும் அடிக்கடி தோன்றும் இருமல், சளி, டான்சில் போன்ற சுவாசப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது", எனக் குறிப்பிடுகிறார்.


 • கீல்வாதம் அல்லது மூட்டுவலி

  "கிலோய் அழற்சி நீக்கப் பண்போடு வலிப்புத்தாக்கம் மற்றும் மூட்டுவலிக்கு எதிரான பண்புகளையும் கொண்டுள்ளது, இது மூட்டுவலி நீக்கம் மற்றும் அதன் பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஜாயிண்ட் வலியைப் பொறுத்தமட்டில், அதைக் குணப்படுத்த நோயாளிகளால் சீந்தில் தண்டின் பொடியை பால்சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளப்படுகிறது", என்கிறார் டாக்டர் ஆஷுதோஷ். இதை இஞ்சியோடு இணைத்து முடக்கு வாத சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம்.


 • ஆஸ்துமா

  ஆஸ்துமா மார்பு இறுக்கம், சுவாசம், இருமல், மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது எளிதாக குணப்படுத்த முடியாத மிகவும் கடின நிலையை ஏற்படுத்துகிறது. "சீந்தில்(கிலோய்) வேரை மெல்வது அல்லது அதன் சாறைக் குடிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவுகிறது மற்றும் வல்லுநர்களால் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது", எனக் கூறுகிறார் ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மனோஜ் கே. அஹுஜா.


 • பார்வைத் திறன்

  இந்தியாவின் பல பகுதிகளில், கிலாய் தாவரம் பார்வைத் தெளிவை அதிகரிக்க கண்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் " கிலோய் பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து அது குளிர்ச்சியான பின் கண் இமைகள் மீது தடவுவதே"


 • வயது முதிர்ச்சி

  கிலோய் தாவரம் இருண்ட புள்ளிகள், பருக்கள், சிறு கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும் மூப்பு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. அது நீங்கள் எப்பொழுதும் விரும்பும் குறைபாடற்ற, ஒளிரும் தோலைத் தருகிறது.

  MOST READ: உங்க கணவருக்கோ மனைவிக்கோ வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?


 • குறிப்பு

  இது ஒரு இயற்கை மற்றும் பாதுகாப்பான மூலிகைத் தீர்வு என்பதால் கிலோய் நுகர்வினால் எந்த தீவிர பக்க விளைவுகளும் இல்லை. எனினும், சில சந்தர்ப்பங்களில் -கிலோயைப் பயன்படுத்துவது மலச்சிக்கல் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தலாம். நீங்கள் நீரிழிவு நோயாளி மற்றும் நீண்ட கால அடிப்படையில் கிலோயை உட்கொண்டிருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்கவும். நீங்கள் கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் தவிர்க்கவும்.
சீந்தில் (அமிர்தவல்லி, சோமவல்லி அல்லது Giloy) வழங்கும் 10 அதி சிறந்த நன்மைகள்: அமரத்துவம் தரும் ஆயுர்வேத வேர். "சீந்தில் (டினோஸ்போரா கார்டிபோலியா) ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும், இது இந்திய மருத்துவத்தில் காலங்காலமாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது" என டெல்லியில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர் அன்ஷுல் ஜெய்பாரத் கூறுகிறார்.

சமஸ்கிருதத்தில், கிலோய் 'அமிர்தா' என்று அழைக்கப்படுகிறது, இதிலுள்ள ஏராளமான மருத்துவ குணங்களின் காரணமாக, 'அமரத்துவம் தரும் வேர்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்