Back
Home » ஆரோக்கியம்
இந்த 8 உணவுகளை ஒரு முறை சாப்பிட்டாலே, எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா?
Boldsky | 13th Mar, 2019 03:45 PM
 • கடற்சிப்பி


  பலருக்கு கடற்சிப்பியின் மகத்துவம் தெரிய வாய்ப்பில்லை. சுவை குறைந்த உணவுகளில் இதுவும் ஒன்று. என்றாலும், இதில் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

  ஹார்மோன் உற்பத்தியை சீராக வைக்கவும், முடி உதிர்வு, எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவற்றை குணப்படுத்தவும் கடற்சிப்பி உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.


 • ஓட்ஸ்


  சுவை குறைவாக இருக்க கூடிய உணவாக இருந்தாலும், இதன் பலன் அதிகம். ஓட்ஸை உணவில் சேர்த்து கொண்டால் செரிமான கோளாறு முதல் இரத்த அழுத்த பிரச்சினை வரை தீர்வுக்கு வரும். அத்துடன் சீரான மன நிலையை இது ஏற்படுத்தும்.


 • ப்ரூன்ஸ்


  உலர்ந்த பழங்கள் பலவும் சுவை குறைந்ததாகவே காணப்படும். ஆனால், இவற்றில் பல சத்துக்கள் மறைந்துள்ளது.
  உலர்ந்த ப்ரூன்ஸை சாப்பிடுவதால் இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். அத்துடன் இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையும் கூடாது.

  MOST READ: நீங்கள் சாப்பிடும் இந்த 10 உணவுகளும் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா..?


 • முளைக்கீரை


  ஆக்ஸாலிக் அமிலம் அதிக அளவில் முளைக்கீரையை உள்ளது. இதனால் தான் சுவையற்ற கீரையாக இது உள்ளது. புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் பிரச்சினை வரை அனைத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை இதற்குண்டு.
  அதனால் தான் வாரத்திற்கு 1 முறையாவது முளைக்கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • சியா விதைகள்


  பல வித பானங்களில் இந்த விதையை சேர்ப்பதுண்டு. ஆனால், இதன் மகிமை நமக்கு தெரிவதில்லை. இந்த சியா விதைகளை உண்டால் பசியின்மை நீங்கி, ஆரோக்கியமான உடல் அமைப்பை ஏற்படுத்தும். அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.


 • ப்ரோக்கோலி


  காலிபிளவரை விட ப்ரோக்கோலியை அதிகம் சாப்பிடுவதற்கு சில காரணிகள் உள்ளன. ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, பீட்டா கேரட்டின், கால்சியம், இரும்புசத்து, போன்றவை நிறைந்துள்ளதால் செல்களின் சிதைவை தடுக்கிறது. இதனால் செல்கள் எப்போதுமே புத்துணர்வுடன் இருக்க இந்த ப்ரோக்கோலி பயன்படுகிறது.


 • எலும்பு சாறு


  கிட்டத்தட்ட ஆட்டுக்கால் சூப் போன்ற வடிவில் தான் இவை இருக்கும். ஆட்டு எலும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சாறு தான் இது.
  இதில் நீங்கள் நினைப்பது போன்று மசாலாக்கள் சேர்க்காமல் இருந்தால் மட்டுமே இதன் பலன் அப்படியே கிடைக்கும்.


 • கேபிர்


  கேபிர் என்பது நொதித்த பாலில் இருந்து பெறப்படும் உணவு பொருள். இது நொதிக்கும் போது இவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் குடியேறும்.
  இதனால் மிக எளிமையாக எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கும். அத்துடன் செரிமான கோளாறுகளை குறைக்கவும் இது உதவுகிறது.

  MOST READ: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க இந்த 8 உணவுகளில் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்..!


 • பீட்ரூட்


  சிவப்பு நிற காய்கறியாக பீட்ரூட் கூட இந்த வரிசையில் அடங்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புசத்து, வைட்டமின் எ போன்றவை நேரடியாக உடலுக்கு கிடைக்கும்.
  அத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக்கி எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொள்ளும்.
"அறுசுவையும் இருந்தால் தான், சாப்பாட்டு மேல கையையே வைப்பேன்" என ஒரு கும்பலே சுற்றி திரியும். சுவை மிகுந்த உணவு, ஆரோக்கியத்தை தரும் தான். என்றாலும் இந்த வகை உணவுகளை மட்டுமே சேர்த்து கொள்வது நல்லதல்ல. சுவைக்காக சாப்பிட்டால் அது நமது உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்து விடும் என அந்த காலத்திலே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சுவைமிக்க உணவுகளை விடவும் சுவையற்ற உணவுகளில் தான் உண்மையிலே சத்துக்கள் நிறைந்து இருக்கும் என இன்றைய மருத்துவம் கூறுகிறது. ஆனால், இதற்கு மாறாக நமது இஷ்டத்திற்கு கண்ட உணவுகளை சாப்பிடுவதே தற்போது ஃபேஷனாக உள்ளது. முற்றிலும் மோசமான உணவு முறைக்கு தான் இன்றைய தலைமுறையினர் சென்று கொண்டிருக்கின்றனர்.

இது வேதனை அளிக்க கூடிய ஒன்று தான். இதற்கு மாறாக சில உணவுகள் உள்ளன. இவற்றை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்