Back
Home » ஆரோக்கியம்
பிரியாணி இந்திய உணவு இல்லையாம்..! அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா?
Boldsky | 20th Mar, 2019 05:40 PM
 • சிக்கன் டிக்கா மசாலா


  மிகவும் சுவையான உணவுகளில் இதுவும் ஒன்று. இந்த உணவின் பெயரை பார்த்து விட்டு இது ஏதோ வட நாட்டு உணவு என எண்ணி இருப்போம்.
  ஆனால், இது வட நாட்டு உணவு கிடையாது. இது ஸ்காட்லாந்து நாட்டின் உணவாகும். முதன்முதலில் அங்கு தான் இந்த சுவைமிக்க உணவு அறிமுகமானது.


 • பீட்சா


  இன்று பலருக்கும் விருப்பமான உணவு பீட்சா தான். காலையில் ஒரு பீட்சா, மாலையில் ஒரு பீட்சா என அன்றைய சாப்பாட்டை அம்சமாக முடித்து கொள்கின்றனர்.
  இந்த உணவின் பூர்வீகம் இத்தாலியாம். இந்த நாட்டில் இருந்து தான் பீட்சா பண்பாடு உலகம் முழுக்க பரவியது.

  MOST READ: மண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்! ஆச்சரியமூட்டும் ஆய்வின் முடிவு!


 • பிரஞ்சு ப்ரைஸ்


  உருளைக்கிழங்கை நீள் வாக்கில் அரிந்து அதை பொரித்து எடுத்தால் அதற்கு பெயர் பிரஞ்சு ப்ரைஸ். இதன் பெயரிலே இந்த உணவின் பூர்வீகம் உள்ளது. ஆமாங்க, இந்த உணவானது பிரஞ்சு நாட்டில் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.


 • சமோசா


  சம்சா அல்லது சோமோச என்றழைக்கப்படும் இந்த மொறு மொறு உணவின் பூர்வீகம் இந்தியா தான். இந்த உணவானது கில்ஜி என்கிற ராஜ வம்சத்தின் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் தான் உலக அளவில் இது மிகவும் சிறப்பு பெற்றது.


 • பாஸ்தா


  இந்த பாஸ்தா உணவானது இத்தாலி நாட்டின் பிரதான உணவாகும். ஆனால், பெரும்பாலான மக்கள் இது சீன நாட்டின் பிரதான உணவு என நம்புகின்றனர்.
  ஆனால், மார்க்கோபோலோ என்கிற இத்தாலி நாட்டின் பயணி ஒருவர் தான் இந்த உணவை உலகெங்கும் பரப்பினர் என வரலாறு கூறுகிறது.


 • ஃபார்ச்யுன் குக்கீஸ் (Fortune Cookies)


  மிகவும் அற்புதமான உணவு வகை தான் இந்த Fortune Cookies எனப்படும் இரகசிய குறிப்பு கொண்ட உணவு பொருள்.

  இதிலுள்ள இரகசிய செய்திக்கு தான் இந்த உணவு மிகவும் பிரபலமாக மாறியது. சீனாவில் இது அதிக அளவு விற்கப்பட்டாலும், இதன் பூர்வீகம் அமெரிக்கா தான்.

  MOST READ: இந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..? காரணம் என்ன?


 • பீனட் பட்டர்


  பிரட்டில் வைத்து சாப்பிடப்படும் இந்த உணவின் பூர்வீகம் கனடா நாடு தான். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
  வேர்க் கடலையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவின் தன்மையை அறிந்து தான் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 • சீஸ் கேக்


  நாக்கில் எச்சி ஊற வைக்கும் சுவை இந்த சீஸ் கேக்கிற்கு உண்டு. இந்த சுவைமிக்க கேக்கின் பூர்வீகம் கிரேக்க நாடு தானாம். அதன் பின்னர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமாக மாறி விட்டது.


 • பிரியாணி


  பிரியாணி என்றால் அது முஸ்லீம்களின் உணவு என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். குறிப்பாக முகலாய மன்னர்களின் ஆட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்ட உணவாகும்.
  ஆனால், இதற்கு முன்னர் பெர்சிய நாடுகளில் இந்த உணவை உண்டு வந்தார்களாம். ஆதலால், இதன் பூர்வீகம் பெர்சியா என ஆய்வுகள் சொல்கின்றன.

  MOST READ: வெயில் காலத்துல நோயில்லாம இருக்கணுமா? அப்போ இந்த உணவுகள வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிடுங்க!


 • நூடுல்ஸ்


  கடைகளில் புதுவித உணவாக பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூடுல்ஸ் அறிமுகமானது. இந்த உணவின் பூர்வீகம் சீனா தான். அதன் பின்பு உலகெங்கும் இது மிகவும் பிரபலமான உணவாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கென்று ஒரு சிறப்பான உணவு வகை உண்டு. சில உணவுகள் அந்த நாட்டில் மட்டுமே சிறப்பு பெற்றிருக்கும். வேறு சில உணவுகள் உலக நாடுகள் அனைத்துலையும் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கும். எப்படி இந்தியாவில் பல மசாலா சார்ந்த உணவுகள், பலகாரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளதோ அதே போன்று உலக நாடுகளிலும் பல வகையான உணவுகள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளது.

சில நாட்டு உணவுகள் நாம் நினைப்பது போன்று அந்த நாட்டில் இருந்து பூர்வீகமாக வந்ததாக இருக்காது. இந்திய உணவுகளில் வடை, சமோசா, புட்டு, முறுக்கு, அல்வா, காரம்..இப்படி பல உணவுகள் வலம் வருகிறது. ஆனால் இவற்றில் பல இந்தியாவில் இருந்து வந்ததில்லை. வேறு சில நாடுகளில் இருந்து இவை வந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நமது இந்திய நாட்டு உணவு என நாம் நம்பி கொண்டிருந்த பிரியாணியும் அடங்கும். பிரியாணி உண்மையில் எந்த நாட்டு உணவு? இதன் பூர்வீகம் என்ன? எப்படி இந்திய நாட்டுக்குள் வந்தது? மேலும் மற்ற உணவுகளின் பூர்வீகம் என்ன? இது போன்ற பல தகவல்களை இந்த பதிவில் அறியலாம்.

   
 
ஆரோக்கியம்