மனித உடலில் கண்கள் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும் நமது அன்றாட செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில செயல்களே நமது கண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.
அப்படி நம் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்தான் கண்களை அடிக்கடி தேய்ப்பதாகும். கண்களில் அரிப்பு ஏற்படும்போது கண்களை அழுத்தி தேய்ப்பது உங்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம். ஆனால் அது உங்கள் கண்ணின் பல பாகங்களின் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் கண்களை தேய்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.