Back
Home » ஆரோக்கியம்
நீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா? இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...
Boldsky | 9th Oct, 2019 03:01 PM
 • நடந்த தவறை நினைத்து வருத்தப்படாதீர்கள்

  தவறுகள் செய்வது என்பது மனித இயல்பு. அதனால் அதை நினைத்து சதா வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள். ஆனால் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். திரும்ப திரும்ப அதே தவறை செய்யாதீர்கள். இப்படி செய்யும் போது வீணான கவலைகள் உங்களுக்கு இருக்காது.

  MOST READ: இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா?... இந்த அறிகுறி இருக்குமாம்...


 • நச்சான உறவுகளுக்கு முடிவு கட்டி விடுங்கள்

  நாம் தினந்தோறும் நிறைய பேரை சந்திக்கிறோம். நிறைய பேர்கள் நமக்கு உறவாகின்றன. ஆனால் எல்லோரும் நமக்கு உண்மையான நண்பராக இருப்பதில்லை. அவர்கள் உண்மையான நண்பராக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம். ஆனால் அவரால் எப்போதுமே உங்களுக்கு பிரச்சனை என்றால் தயவு செய்து அந்த உறவை விலக்கி விடுங்கள். இதனால் அடிக்கடி மனம் கஷ்டப்படுவதை தவிர்த்து நிம்மதியாக வாழ முடியும்.


 • யாரை நம்பலாம்

  நீங்கள் பிறரை நம்புவதில் அப்பாவித்தனமாக இருக்கலாம் ஆனால் ஒரு போதும் முட்டாளாக இருக்காதீர்கள். யாரை நம்புவது என்ற வரைமுறை வைத்துக் கொள்ளுங்கள். எல்லாரையும் நம்புவது பிரச்சனையை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் அது உங்களை உணர்ச்சி ரீதியாக கவலைப்பட வைத்து விடும். எனவே சோஷியல் மீடியா போன்றவற்றில் பழகும் போது பார்த்து பழகுங்கள். தேவையில்லாத உறவுகள் உங்களை எமோஷலாக பீல் பண்ண வைத்து விடும்.


 • குறைபாடுகளுக்கு பெருமைப்படுங்கள்

  எந்த மனிதனும் சரியானவன் அல்ல. பரிபூரணமான மனிதர்கள் என்று யாரும் இல்லை. ஒவ்வொருக்குள்ளும் எதாவது குறைபாடுகள் இருக்கும். இதை புரிந்து கொண்டாலே போதும் தேவையில்லாமல் கவலைப்படுவதை ஓரம் கட்டி விடலாம்.இனி உங்கள் உடம்பில் இருக்கும் குறைகளை நினைத்தும் கவலைப்பட மாட்டீர்கள். நம்மளுக்கு மட்டும் ஏன் பல் இப்படி இருக்கிறது, முடி ஏன் இப்படி இருக்கிறது என்று தேவையில்லாமல் கவலைப்பட மாட்டீர்கள்.


 • எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்

  முதலில் மகிழ்ச்சி தான் உங்கள் முன்னுரிமை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே உங்கள் மகிழ்ச்சியை கொல்லும் விஷயங்களை நிராகரியுங்கள். மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக் கூடிய நபர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் கடினமான நேரங்களில் ஆதரவளிக்கும் நண்பர்களை பெறுங்கள். மகிழ்ச்சிக்கான சூழலை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இது உங்களை உணர்வுப்பூர்வமாக வலுப் பெற வைக்கும்.

  MOST READ: உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...


 • நேர்மையான கருத்துக்களை சொல்ல தயங்க வேண்டாம்

  உங்கள் நேர்மையான எண்ணங்களை ஒரு போதும் மறைக்க வேண்டாம். வெளிப்படையாக வழங்க முயலுங்கள். நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ அதை பேசுகிறீர்கள். இது குறித்து கவலைப்படாதீர்கள். எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் உங்கள் நேர்மையான எண்ணங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.


 • நொண்டி சாக்கு சொல்பவர்கள் வேண்டாம்

  நீங்கள் ஒரு கடினமான உழைப்பாளியாக இருக்கலாம். உங்களுக்கு உங்க முன்னேற்றம் இலக்காக இருக்கலாம். ஆனால் உங்க பார்ட்னரோ வேலை, தொழிலில் கவனம் செலுத்தாமல் நொண்டி சாக்குகளை சொன்னால் என்ன செய்வீர்கள்? இந்த மாதிரியான நபர்கள் உங்களுக்கு உணர்ச்சி ரீதியாக பிரச்சனைகளைத் தான் தருவார்கள். இவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.


 • தோல்வியிலிருத்து கற்றுக் கொள்ளுங்கள்

  தோல்வி எல்லோரையும் சந்திக்கும். அதற்காக கவலைப்படாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் வெற்றிக்கான வழி கிடைக்கும். எனவே தோல்வியிலிருந்து எதையாவது கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விழாதீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் தோல்விகள் உங்களை பலப்படுத்தும். உங்கள் கனவுகளில் கதவுகள் மூடப்படவில்லை. அதற்கான ஒரு வழி மட்டும் தான் அடைபட்டு உள்ளது. இன்னும் ஏராளமான வழிகள் உள்ளன என்று வலிமையாக போராட முயலுங்கள்.


 • மன்னிக்க தயாராகுங்கள்

  நீங்கள் மற்றவர்க்கு ஒரு தவறு செய்கிறீர்கள். அதற்காக மற்றவர் உங்களை மன்னித்து விட்டால் எவ்வளவு சந்தோஷம் அடைவீர்கள். அது மாதிரி தான் மற்றவர் செய்யும் தவறையும் மன்னிக்க தயாராகுங்கள். இதன் மூலம் அதைப்பற்றி தேவையில்லாமல் புலம்ப மாட்டீர்கள். இந்த மன்னிப்பு உங்கள் உறவுகளை காக்கும். எனவே மன்னிப்பது ஒரு நல்ல பழக்கம்.

  MOST READ: இதயத்துலயும் புற்றுநோய் வருமா? வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...


 • தவறுகளை சுட்டிக் காட்டும் போது புண்படாதீர்கள்

  மற்றவர்கள் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டலாம். ஆனால் அதற்காக வருத்தப்பட்டு கொண்டு இருக்காதீர்கள். ஏனெனில் அதை மாற்றத்திற்கான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி அவர்கள் குறைகளை சுட்டிக் காட்டும் போது நிதானமாக அவர் ஆலோசனையை கேளுங்கள். சரியாகப்பட்டால் அதை மாற்றிக் கொள்ள முயலலாம். அப்படி மாற்றிக் கொள்வது கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் தரும்.

  மேற்கண்ட வழிமுறைகள் உங்களை உணர்ச்சி ரீதியாக வலுவான நபராக மாற்றும். ட்ரை பண்ணி பாருங்க.
மாற்றம் மற்றுமே மாறாது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக எல்லோர் வாழ்விலும் சில மாற்றங்களை கண்டு இருப்போம். அதுவே இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக பெரிய முன்னேற்றத்தை நாம் காண முடியும். எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உணர்ச்சி ரீதியான நபராகத்தான் இருக்கிறோம். சிலர் தொட்டதுக்கு எல்லாம் அழ ஆரம்பித்து விடுவார்கள். சிலர் எடுத்ததுக்கு எல்லாம் கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

சிலர் பார்த்ததற்கு எல்லாம் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். இப்படி உணர்ச்சி ரீதியாக நாம் வீக்காக இருக்க என்ன காரணம் என்று யோசித்து இருக்கிறீர்களா? இதை எப்படி மாற்றுவது? உணர்ச்சி ரீதியாக பலமான நபராக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம். இது உங்களை உணர்ச்சி ரீதியாக வலுவான நபராக மாற்ற உதவும்.

   
 
ஆரோக்கியம்