Back
Home » ஆரோக்கியம்
இரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
Boldsky | 10th Oct, 2019 06:10 PM
 • காபி

  உங்களுக்கு உடல் வலி அதிகமாக உள்ளதா? அப்படியானால் ஒரு கப் காபி குடியுங்கள். உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலியை, காபியில் உள்ள காப்ஃபைன் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் ஒரு கப் காபியில் 100 மிகி முதல் 130 மிகி வரையிலான காப்ஃபைன் உள்ளது. இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் வலியால் அவஸ்தைப்பட்டால், ஒரு கப் காபியைக் குடியுங்கள்.


 • இஞ்சி

  இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் வலியை உண்டாக்கும் காயங்கள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடும். எனவே நீங்கள் உடல் வலியால் கடுமையாக கஷ்டப்பட்டால், இஞ்சியை சாப்பிடுங்கள். அதுவும் இஞ்சியை டீயாக, கேப்ஸ்யூலாக, ஜூஸாக என எந்த வடிவிலும் எடுக்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.


 • சால்மன்

  சால்மன் சுவையானது மற்றும் புரோட்டீன் நிறைந்தது மட்டுமின்றி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிரம்பியுள்ளதால், இந்த மீனை உட்கொண்டால், ஆர்த்ரிடிஸ் வலி குறையும். ஒரு ஆய்வில், ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை மீன் எண்ணெய் மாத்திரை வடிவில் எடுப்பதால், வலி நிவாரண மாத்திரைகளால் கிடைக்கும் பலனை விட சிறப்பான பலன் கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே இரவு நேரத்தில் உடல் வலி அல்லது வேறு ஏதேனும் வலியை சந்தித்தால், சால்மன் மீனை சாப்பிடுங்கள்.


 • செர்ரி

  செர்ரிப் பழம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமில தேக்கத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில் தீவிரமான ரன்னிங் பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு புளிப்பான செர்ரிப் பழ ஜூஸ் குடித்தவர்களுக்கு, ரன்னிங் பயிற்சிக்குப் பின் தசை வலி குறைவாக இருப்பது தெரிய வந்தது. மேலும் செர்ரிப் பழம் எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு மட்டுமின்றி, உடல் வலிகளுக்கும் நல்ல நிவாரணத்தை வழங்கும்.


 • ப்ளூபெர்ரி

  இந்த சிறிய பழத்தில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அழற்சியை எதிர்த்து வலியைக் குறைக்கும். ஒருவேளை ப்ளூபெர்ரி சீசன் இல்லாவிட்டால், உறைய வைக்கப்பட்ட ப்ளூபெர்ரியை சாப்பிடுங்கள். ப்ளூபெர்ரி கிடைக்காவிட்டால், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடலாம். இதனாலும் உடல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


 • பூசணி விதைகள்

  பூசணி விதைகளில் வளமான அளவில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இது ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றைத் தடுப்பதோடு சரிசெய்யும். மேலும் இது இரவு நேரத்தில் ஏற்படும் கால் குடைச்சலைத் தடுக்கும். எனவே ஸ்நாக்ஸ் நேரங்களில் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுங்கள்.


 • மஞ்சள்

  மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம். ஆய்வுகளில் மஞ்சளில் உள்ள குர்குமின், எந்த பக்க விளைவுமின்றி ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது. அதுவும் மஞ்சளை மிளகுடன் சேர்த்து உட்கொண்டால், அதில் உள்ள குர்குமின் எளிதாக உடலால் உறிஞ்சப்படும். உங்களுக்கு உடல் வலி கடுமையாக இருந்தால், ஒரு டம்ளர் பால் அல்லது சுடுநீரில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிறிது இஞ்சி மற்றும் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள்.
ஒருவருக்கு உடல் வலி பல காரணங்களால் ஏற்படலாம். அதில் கடுமையான உடற்பயிற்சி, அதிகமான வீட்டு வேலை, தவறான நிலையில் தூங்கி எழுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி ஏற்படும் உடல் வலிக்கு கடைகளில் விற்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போடுவதற்கு பதிலாக குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதன் மூலம் சரிசெய்யலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதுவும் நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை நம் உடலில் நாம் நினைத்திராத பல செயல்களை செய்கிறது. இதற்கு காரணம் அவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான். ஆனால் அதே சமயம் குறிப்பிட்ட சில உணவுகளான சாக்லேட், முட்டைகள், கோதுமை, இறைச்சி மற்றும் சோளம் போன்றவை உடலினுள் அழற்சியை உண்டாக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

இக்கட்டுரையில் ஒருவரது உடல் வலியைக் குறைக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளைப் படித்து, வலி நிவாரண மாத்திரைகளுக்கு பதிலாக அந்த உணவுகளை இனிமேல் சாப்பிடுங்கள்.

 
ஆரோக்கியம்