Back
Home » வீடு-தோட்டம்
தீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்!
Boldsky | 23rd Oct, 2019 11:00 AM
 • தோரணங்கள்

  தீபாவளி நாளன்று வீட்டை அலங்கரிக்க பெரும்பாலும் தோரணங்கள் கட்டப்படுகிறது. இந்த அழகான வண்ணமயமான தோரணங்களை வீட்டின் நுழைவாயிலில் கட்டி மகிழலாம். இது வீட்டிற்குள் லட்சுமி தேவியின் அருளை ஈர்க்க உதவும். கைகளால் நெய்யப்பட்ட, எம்பிராய்டரி டிசைன், ஜமிக்கி, ஸ்டோன் வொர்க் போன்ற ஏராளமான டிசைன்களில் இந்த தோரணங்கள் கிடைக்கின்றன. எனவே உங்கள் வீட்டின் வாயிலுக்கு ஏற்ற தோரணங்களை வாங்கி அலங்கரிக்க முயலலாம்.


 • அலங்கார விளக்குகள்

  தீபாவளி அன்று உங்கள் வீட்டில் இருள் நீங்கி ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அலங்கார விளக்குகள் ஏற்றதாக இருக்கும். இது உங்கள் வீட்டை புதுப்பாணியில் அழகுபடுத்தும். சாலையோர கடைகளில் கூட நீங்கள் நிறைய டிசைன்களில் இந்த விளக்குகளைக் காணலாம். தீபாவளி அன்று உங்கள் வீட்டிலேயே பார்ட்டி அல்லது கூரை வீடு அலங்கரிப்பு போன்றவற்றிற்கு இந்த விளக்குகள் அம்சமாக இருக்கும்.


 • தீப விளக்குகள்

  வீட்டில் தீப விளக்குகள் ஏற்றுவது பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்தக் காலத்தில் மண்ணால் ஆன கிளியான் சட்டிகளில் எண்ணெய்யை ஊற்றி விளக்கேற்றி வந்தார்கள். ஆனால் தற்போது பலவிதமான வடிவங்களில், பளபளப்புடன், மெழுகு நிரப்பப்பட்டு போன்ற ஏராளமான டிசைன்களில் விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. நவீன அலங்கரிப்பாக மின்சார விளக்குகள் கூட வந்து விட்டன. இது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதோடு பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். நிறைய மாற்றங்கள் வந்தாலும் நமது நோக்கம் ஒன்றே வீட்டில் விளக்கேற்றி லட்சுமி தேவியை அழைப்பதே. தீபத் திருநாள் அன்று வீட்டின் இருள் நீங்கி ஒளி பெறுவது போல நம் அக இருள் நீங்கி ஒளி பெறுவோம்.


 • ரங்கோலி

  நம் இந்துக்கள் பண்டிகை காலங்களில் வீட்டிற்கு வெளியே அழகாக வண்ணக் கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்கு காரணம் கோலங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்த்து கடவுளின் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே இந்த தீபாவளி அன்று வண்ணக் கோலப்பொடிகள், வண்ண மலர்கள் என்று கோலமிட்டு வாசலை அழகு படுத்துங்கள். இப்பொழுது தான் தீபாவளிக்கென்றே ஆன்லைனில் நிறைய கோலங்கள் உள்ளன. பின்ன என்ன அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் தீபாவளியை வரவேறுங்கள்.


 • பூக்களின் வாசனை இதழ்கள்

  வீட்டில் தெய்வீக மணம் வீச நறுமணம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு வாசனை உள்ள பூக்கள் உதவுகிறது. எனவே வாசனை உள்ள பூக்களைக் கொண்டு உங்கள் வீட்டை நீங்கள் அலங்கரிக்கலாம். ஒரு செம்பு அல்லது பித்தளை கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வண்ண பூக்களை இட்டு வாசலில் வையுங்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு லட்சுமி தேவியின் அருளை கிடைக்கச் செய்யும். வீடு முழுவதும் பக்தி மணம் கமழும்.

  மேற்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த தீபாவளியை இந்த மாதிரி அழகாக வரவேற்க நீங்க ரெடியா?
தீபாவளி என்பது நம் நாட்டில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. இது எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திருநாளாகும். இந்த பண்டிகைக்கு சில மாதங்களுக்கு முன்பே வீட்டை எல்லாம் சுத்தம் செய்து புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என்று எல்லாவற்றையும் வாங்கி மகிழ்வார்கள்.

இந்த தீபாவளி தினத்தன்று வீடு தோறும் வண்ணக் கோலமிட்டு வரிசை வரிசையாக விளக்கேற்றி வீட்டை அலங்கரித்து கொண்டாடி மகிழ்வார்கள். மாலை‌யி‌ல் லட்சுமி பூஜை செய்யப்படும். அதற்கு முன்னரே வீட்டை எல்லாம் சுத்தம் செய்து பூஜைக்கு தேவையானவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து வைப்பார்கள். பிறகு வீட்டில் திருவிளக்கேற்றி வண்ண வண்ண தோரணங்கள், பட்டாசு சத்தங்கள், பலகாரங்கள் என்று அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் கூடி புன்முறுவலுடன் தீபாவளியை வரவேற்பார்கள்.

MOST READ : தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா?

வீட்டில் வரிசையாக விளக்குகள், திருவிளக்குகள் ஏற்றுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் வர வேண்டும் என்று செய்கிறார்கள். மேலும் வீட்டிற்கு நண்பர்கள் உறவினர்கள் வருவது அந்த நாளை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தீபாவளியை நீங்கள் மேலும் சிறப்பாக கொண்டாட நாங்கள் சில டிப்ஸ்களை வழங்க உள்ளோம்.

 
ஆரோக்கியம்