Back
Home » திரைவிமர்சனம்
பிகில் சினிமா விமர்சனம்: சும்மா வேற லெவல் வெறித்தனம்
Oneindia | 25th Oct, 2019 01:41 PM

சென்னை: தீபாவளி எப்ப வரும் வரும்னு காத்துக்கிட்டு இருந்தவங்கள விட, தளபதியோட பிகில் எப்ப வரும் வரும்னு காத்துகிட்டு இருந்தவங்க பலர். தளபதி படம் வெளியாகுது என்றாலே அது மாஸ். அதுவும் தீபாவளிக்கு ரிலீஸ்னா சும்மாவா. தமிழ்நாட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த இயக்குநர் அட்லீ. சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள விஜய் படம் பிகில். அட்லீ -விஜய் காம்போவில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதை இந்த படமும் நிரூபித்துள்ளது.

அட்லி விஜய் காம்பினேசனில் உருவான பிகில் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி - விஜய் கூட்டணியில் 3 ஆவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அட்லீ படம் என்றால் அதில் நிச்சயம் எமோஷனல் காட்சிகள், கண் கலங்க வைக்கக்கூடிய காட்சிகள் இருக்கும். இது அனைத்தும் பிகில் படத்திலேயும் இருக்கு. அதிகப்படியான சென்டிமென்ட் இந்த படத்திலும் நிச்சயம் இருக்கு. என்ன தான் என்டெர்டெய்ன்மெண்ட், ஆக்சன் இருந்தாலும் எமோஷனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் அட்லீ என்பது நாம் அறிந்ததே. எனவே எமோஷன் காட்சிகளுக்கு இந்த படத்தில் குறைவே இல்லை.

என்னதான் அரைச்ச மாவேயே திரும்பவும் அரைக்கிறாங்க என்ற விமர்சனம் அட்லீ மேல் இருந்தாலும், திரைக்கதையை அவரை விட சிறப்பாக செய்ய யாரும் இல்லை என்ற அளவிற்கு முன்னணியில் இருக்கும் இயக்குநர் அட்லீ. அரைச்சமாவை பதமாக பக்குவமாக ருசியாக சுட்டுக்கொடுப்பதில் கில்லாடி அட்லீ என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பிகில் ஒரு சிறந்த கால்பந்து வீரர்,பிகிலின் அப்பாவான ராயப்பன் ஒரு தாதா, தனது அப்பா எதிரிகளால் வீழ்த்தப்பட்டதை கண் முன்னே பார்த்துவிடுகிறார். ஆதலால் வேறு வழி தெரியாது கால்பந்தை விட்டு விலகும் பிகில் மைக்கேலாக கையில் கத்தியை எடுக்கிறார் விஜய். கொஞ்சம் பழைய ஜூஸ் தான் ஆனால் கலர் வேற.

டிரெண்டிங் கிங்.. இந்தியளவில் டிரெண்டாகும் பிகில் ஹேஷ்டேகுகள்!

இதற்கிடையில் நயன்தாரா-விஜய்க்கு இருக்கும் காதல் காட்சிகள் காமெடி கலந்த ரொமான்டிகாவே இருக்கிறது ,இன்னமும் கூட புதுமை தன்மையுடன் காட்சிகள் அமைந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். காதலுக்கு மரியாதை மறந்து போச்சா என்று நயன்தாரா கேட்பது ரசிக்க வைக்கிறது.

யோகி பாபு காமெடிகள் பத்தில் இரண்டு நம்மை சிரிக்க வைக்கிறது . ஜாக்கி செராப் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் முதல் பாதியில் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் ஜாக்கி, இரண்டாம் பாதியில் தன் உண்மை முகத்தை காட்டுகிறார்.

கால்பந்து வீரராக வரும் கதிர் தான் இந்த படத்தின் பிளாஸ்பேக் ஓப்பனர். கதிர் தான் படத்தின் முக்கிய புள்ளியும் கூட. எப்போதும் அட்லி படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் இறப்பது போல காட்சிகள் இருக்கும், ஆனால் நல்லவேளை அப்பா விஜய் மட்டும் தான் அந்த பாக்கியத்தை பெறுகிறார்.

மருத்துவமனையில் இருந்து பிளாஸ்பேக்கை ஓப்பன் செய்கிறார் கதிர், கதிரின் கால்பந்து அணியை கோச்சிங் செய்ய- வேறு யாரும் இல்லாத சூழ்நிலையில் ஷூ மாட்டி தயாராகிறார் மைக்கேல்.

இது வரை முதல் பாதி எந்த சலசலப்பும் இல்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் நாம் முன்னோட்டதில் பார்த்தது போல் கால்பந்து வீராங்கனைகளுக்கும் விஜய்க்கும் பிரச்சனைகள் உண்டாகுகிறது. ஜாக்கி ஷெராப் மீண்டும் பிரச்சினை செய்ய அதையும் எதிர்த்து அந்த வீராங்கனைகளுக்கு பிடித்த பயிற்சியாளராக மாறுகிறார் மைக்கேல்.

ஏ.ஆர்.ரஹ்மான்-விஜய் காம்போவில் மற்றுமொரு படம் பிகில் என்பதால், பாடல்களின் ஹிட்டை தடுக்கவே முடியாது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இரண்டாம் பாதியில் வரும் சிங்கபெண்ணே பாடலுக்கு ,மெர்சலில் ஆளபோறான் தமிழன் பாடலுக்கு இருந்த வரவேற்பு இருக்கிறது. சிங்கபெண்ணே பாடலுக்கு வரும் காட்சிகள் கனகட்சிதமாக பொருந்தி உள்ளது.

ஆசிட் வீச்சில் பாதிக்க பட்ட அனிதா எனும் பெண்ணை சிரமப்பட்டு அணியில் சேர்கிறார் விஜய். நீட்டினால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அனிதாவின் மரணம் தமிழ்நாட்டையே கலங்க வைத்தது அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு அனிதா என்று பெயர் வைத்து படத்தில் இணைத்திருக்கிறார் அட்லி என்று சொல்லலாம் . படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் சாதித்த பல பெண்களை பற்றி பேசுகிறார் நயன்தாரா. பேசி கைதட்டும் வாங்குகிறார். விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் கால்பந்து போட்டி டையில் முடிய , அணி வெற்றி பெறுமா பெறாதா என்று சுவாரஸ்யமாக சொல்கிறது படத்தின் க்ளைமேக்ஸ்.

படத்தில் சில குறைகள் இருக்கின்றன ஆனாலும் படம் சரியான மசாலா கலந்து ரசிகர்களுக்கு ஏற்றார்ப்போல் இருக்கிறது.'சக் தே இந்தியா' 'கனா' 'டங்கல்' படங்களில் வந்தது போல இந்த படத்திலும் அந்த பயிற்சியாளருக்கும் வீராங்கனைகளுக்கும் இருக்கும் பிரச்சினை சொல்லப்பட்டிருந்தாலும் படம் செல்லும் போக்கில் இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. படத்தின் வெற்றிக்கு முழு காரணம் விஜய் மற்றும் பின்னணி இசையில் கால்பந்து விளையாட்டுக்கு ஏற்றார் போலே இசையில் விளையாடிய ரகுமானும் தான் .

படம் ரிலீஸீக்கு முன் மைக்கேல் மற்றும் ராயப்பன் கதாபாத்திரங்களின் மீது சிலர் மெர்சலின் போது எழுப்பியது போல் இந்த படத்திலும் மத விமர்சனங்களை வைக்க முயன்றனர்,ஆனால் இது ஒரு கமர்சியல் படம் அப்படியே இதை பாருங்கள் என்று படத்தின் திரைக்கதை மூலம் சொல்லிருக்கிறார் அட்லி . படம் முழுக்க முழுக்க போராடி ஜெயிக்க நினைக்கும் பெண்களுக்கானது என்று சொல்ல முடியாது இருப்பினும் இரண்டாம் பாதியில் பெண்களின் உணர்வுகளை மென்மையாகவும் அழுத்தமாகவும் சொல்லியதர்கு ஒரு சபாஷ் போடலாம். சாதனை படைக்க நினைக்கும் பெண்களுக்கான படம் என்று சொல்லித்தான் விளம்பரப்படுத்தி இருந்தார்கள்

2.0 படத்திற்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் பிகில். இதன் அத்தனை பெருமையும் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரமையே சேரும். ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மேற்பார்வையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்க்கும் பொழுது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் மிக பெரிய அளவில் ஊக்கத்தை தரும் விதமாகவும் கதையும் வசனங்களும் அமைந்துள்ளது. இந்த பிகில் சத்தம் பெண்களுக்கு மட்டும் அல்ல - தமிழ்நாட்டில் எல்லோரும் ரசிக்கும் படியாக சத்தமாக கேட்கும் பிகில் .

அட்லி விஜய் கூட்டணி ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது.

   
 
ஆரோக்கியம்