Back
Home » Business
மாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் !
Good Returns | 8th Nov, 2019 03:49 PM
 • விற்பனை தொடர்ச்சியான சரிவு

  மேலும் இந்தியாவில் இனி வளர்ச்சி தடையின்றி மேல் நோக்கி வளரும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் சுசூகியின் தலைவர் தோஷிஹிரோ கூறியுள்ளார். மேலும் ஜனவரி வரை வளர்ந்து வந்த மாருதியின் விற்பனை, கடந்த பிப்ரவரி - செப்டம்பர் 2019 வரை ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டே வருகிறது.


 • வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

  வங்கிகளின் இறுக்கமான பணப்புழக்கம் காரணமாக இந்தியாவின் வாகனத்துறை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் அதிகளவிலான வரி விகிதமும், கிராமப் புற பொருளாதாரமும், நுகர்வோரின் வாங்கும் சக்தியை வெகுவாக குறைத்துவிட்டன. இதனால்ஆட்டோமொபைல் துறை பெருத்த அடி வாங்கியுள்ள நிலையில், குறிப்பாக சிறிய ரக கார் விற்பனையானது வெகுவாக குறைந்துள்ளது.


 • வாகன உற்பத்தியாளர்கள் போராடி வருகிறார்கள்

  இதே சர்வதேச அளவிலான ஃபோர்டு மற்றும் வோல்க்ஸ்வேகன், ஃபியட் போன்ற உலகளாவிய வீரர்கள் ஏற்கனவே, சிறிய கார்கள் சந்தையில், தங்களது வாகனங்களை உட்செலுத்த போராடி வருகின்றனர். இதனால் கார் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் தங்களது முதலீடு குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்களது புதிய மாடல்களை இந்தியாவில் ஒத்தி வைக்கிறார்கள். அல்லது அவர்களது திட்டத்தையே கைவிடுகிறார்கள் என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர் புனீத் குப்தா கூறியுள்ளார்.


 • வாகன உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

  மேலும் சில கார் தயாரிப்பாளர்கள் சிறிய ரக கார்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களது, தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் ஆட்டோ மொபைல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஃபோர்டு தனது இந்தியாவின் பெரும்பான்மையான பங்குகளை மஹிந்திரா & மஹிந்திராவுக்கு விற்க ஒப்புக் கொண்டுள்ளது. இது இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் லாபகரமாக வளர வாகன உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.


 • இதனால் தான் பாதிப்பு

  புதிய சரக்கு மற்றும் சேவை வரியின் அடிப்படையில், மிக அதிகமான வரி மற்றும் மின்சார வாகனக் கொள்கையினால் சரிவு, மேலும் ஓலா மற்றும் உபெர் போன்ற சேவைகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனங்களை இது பாதித்துள்ளன. சரியான கார்கள் இல்லாமை மற்றும் சிறிய அளவிலான விற்பனை நெட்வொர்க் போன்றவை இல்லாதது இத்துறையை புண்படுத்தியுள்ளதாகவும், இத்துறையை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகிறார்கள்.


 • இந்தியா சிறிய சந்தை தான்

  இந்தியா பெரும்பாலும் ஒரு சிறிய கார் சந்தையாகும். இது பெரும்பாலான உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு பலம் அல்ல. இந்த உற்பத்தியாளர்கள் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் அதிகளவிலான எஸ்.யூ.வி மற்றும் சொகுசு கார்களை விற்பனை செய்கிறார்கள் என்று சந்தை நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.


 • இந்தியாவிற்கென தனி வடிவமைப்பு

  மேற்கத்திய வாகன உற்பத்தியாளர்கள், இந்தியாவுக்கென தனியாக வாகனங்களை வடிவமைக்க வேண்டியிருந்தது. இது ஒரு விலையுயர்ந்த பயிற்சி என்றும் வி.ஜி ராமகிருஷ்ணன் அவந்தியம் அட்வைசர் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் கூறியுள்ளார்.


 • எஸ்யூவி வளர்ச்சி

  இதே வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது சகோதரி நிறுவனமான ஸ்கோடா இந்தியாவை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது எஸ்.யூவிக்களிலும் இது கவனம் செலுத்தும். இந்தியாவில் சிறிய ரக கார்களை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறிய கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி போன்றவர்கள் கூட எஸ்.யூவி மற்றும் கிராஸோவர் அறிமுகப்படுத்துவதை தூண்டுகிறது.


 • ஹோண்டா மறுமதிப்பீடு

  இந்த நிலையில் ஹோண்டா தனது இந்தியாவின் திட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகிறது. மேலும் அதன் இரண்டு ஆலைகளில் ஒன்றை ஆராய்ச்சி மையமாக மாற்றக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்கள் வினியோக சங்கிலி செலவினை குறைக்கவும், வாக தொழில்நுட்பங்களை ஒன்றாக உருவாக்குவதற்கும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன.


 • அடுத்து வரும் மாதங்களில் என்னவாகும்

  மேலும் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது இருக்கும் வளங்களையே சுரண்ட விரும்புகிறார்கள். மேலும் அவர்களின் செலவுகளைக் குறைத்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முற்படுகிறார்கள் என்று குப்தா கூறியுள்ளார். ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால், நேரிடையாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் விற்பனை அதிகரித்தால் மட்டுமே இது சரியாகும். இல்லையெனில் இன்னும் பல ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
டெல்லி : உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான சுசூகி மோட்டார் கார்ப், அதன் இந்திய நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவை எச்ச்சரித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனமான சுசூகி மோட்டார் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக இடைவிடாத வளர்ச்சியைக் கண்டு வந்தது. ஆனால் இந்த வளர்ச்சி இந்திய சந்தையில் நிலைக்கவில்லை. மேலும் இது இனியாவது வளர்ச்சி காணுமா? எங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்று இந்திய கிளை நிறுவனத்தினை எச்சரித்துள்ளது.

அதிலும் இந்தியாவில் விற்கப்படும் கார்களின் எண்ணிக்கையில், பாதி எண்ணிக்கையில் தான் உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

ஐயா ஜாலி..! எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..!

   
 
ஆரோக்கியம்