Back
Home » ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? அது பாதுகாப்பானதா?
Boldsky | 4th Jan, 2020 05:01 PM
 • அசாடிராக்டா இண்டிகா

  மனிதர்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தப் பயன்படும் பழமையான மற்றும் பாரம்பரியமான மூலிகைகளில் ஒன்று அசாடிராக்டா இன்டிகா என்படும் வேம்பு. ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதன் சிறந்த பயன் குறிப்பிடப்பட்டுள்ளது. இலைகள் மட்டுமல்ல, பூ, பட்டை, பழம், தண்டு மற்றும் வேர்கள் போன்ற வேப்ப செடியின் பிற பகுதிகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

  MOST READ: மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் தெரியுமா?


 • வேப்பின் பயோஆக்டிவ் கலவைகள்

  வேப்பின் முக்கிய கூறுகள் அசாதிராக்டின் மற்றும் ஆல்கலாய்டுகள், பினோலிக் கலவைகள், ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கீட்டோன்கள் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற பிற சேர்மங்களுடன் அடங்கும். வேப்ப செடியின் இலைகளில் அஸ்கார்பிக் அமிலம், அமினோ அமிலம், நிம்பின், நிம்பாண்டியோல், ஹெக்ஸாகோசனோல், நிம்பனேன், பாலிபினோலிக் ஃபிளாவனாய்டுகள் மற்றும் குர்செடின் ஆகியவை உள்ளன. அதே நேரத்தில் இந்த மூலிகையின் விதைகளில் அசாதிராக்டின் மற்றும் கெடுனின் போன்ற கூறுகள் இருக்கின்றன.


 • நீரிழிவு நோய்

  நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இன்று வீட்டில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. நம் வாழ்க்கை சூழலும், உணவு பழக்க முறை மாறியதில், 35 வயதை கடந்தவுடன் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்குக் கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது.


 • எதிர் பண்புகள்

  ஒரு ஆய்வின்படி, வேம்பில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. வேம்பின் மெத்தனாலிக் சாறு பரிசோதிக்கப்பட்டபோது, உடலில் உள்ள இரத்த குளுக்கோஸைக் குறைப்பதன் மூலம் ஒரு நல்ல வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மையைக் காட்டியது. தொடர்ந்து, நோயாளிக்கு இன்சுலின் ஊசிபோடுவதைக் குறைக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  MOST READ:இந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா?... அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...!


 • பரிந்துரைக்கப்படுவதில்லை

  நீரிழிவு நோய்க்கான வேப்பின் செயல்திறன் நம்பிக்கைக்குரியது. இருப்பினும், அதன் பயன்பாடு நாடுகளுக்கு இடையில் வேறுபடுகிறது. மூலிகை மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படும் பகுதிகளில், நீரிழிவு நோய்க்கு வேம்பின் தேவை அதிகமாக உள்ளது. இருப்பினும், நவீன மருத்துவச் சிகிச்சைகள் வளர்ந்து வரும் நிலையில், வேம்பு சாறுகள் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.


 • முறையான ஆலோசனை

  நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வேம்பை எடுத்துக்கொள்ளலாம். எனினும், ஒரு சுகாதார நிபுணருடன் முறையான ஆலோசனையின் பின்னரே இதைச் செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில தயாரிப்புகளுடன் வேம்பை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் நோயாளிக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.


 • நீரிழிவு நோய் வருவதில் தாமதம்

  வேப்ப இலை சாறு மற்றும் விதை எண்ணெயை நான்கு வாரங்களுக்கு உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எலியின் மீது சோதனை செய்தபோது, வேம்பு வேர் மற்றும் பட்டைகளின் அக்வஸ் சாறு இரத்தில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்திருப்பது கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் வருவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ வேம்பின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

  MOST READ: உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா?


 • இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது

  டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் சரியாக இருக்காத நிலை உடலில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. மூலிகையின் இலை அக்வஸ் சாறு உடலில் குளுக்கோஸ் அளவை சமமாக வைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.


 • வேம்பு காபி

  உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த, வேம்பு காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நீரிழிவு நோயாளி கசப்பான இந்த மூலிகையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேம்பு காபி செய்வது பற்றி இங்கே காணலாம். அரை லிட்டர் தண்ணீரில், சுமார் 20 வேப்ப இலைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இலைகள் மென்மையாகவும், தண்ணீர் கொஞ்சம் பச்சை நிறமாகவும் மாறும்போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்னர் வடிகட்டி, அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
வேப்ப மரத்தை கடவுளாக வழிபடும் பழக்கம் இந்தியாவில் உள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களுடைய வீடுகளில் வேப்ப மரத்தை வளர்க்கிறார்கள். பெரும்பாலும் அனைவரும் வீட்டின் கதவுகளின் மேல் வேம்பு இலையை சொருகி வைத்திருப்பார்கள். இது பழங்காலத்திலிருந்து கடைப்பிடித்து வரும் ஒருபழக்கம். காரணம் வேம்பு இலை கிருமிகளை அழிக்கும். வீட்டில் கிருமித் தொற்று யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேம்பு இலையை வீட்டின் முன்புறமும், மஞ்சள் மற்றும் வேம்பு இலை கலந்த நீரை வீட்டில் தெளித்தும் வருகின்றனர் மக்கள்.

நிறைய பேர் வேப்ப மரம் என்றால் சாமி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் வேம்பு இலை, பூ, மரம் ஆகியவற்றில் மருத்துவ குணம் அதிகமாக நிறைந்து இருக்கிறது. அம்மை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது வேம்பு இலை. கசப்பு தன்மை கொண்ட வேம்பு பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வேம்பு எவ்வாறு நன்மையளிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.

 
ஆரோக்கியம்