Back
Home » செய்தி
கணவர் கறுப்பர் இனம்..எனக்கு 2 கருப்பு இன குழந்தைகள்... கமலாவின் தாய் சியாமளா பெருமிதம்!!
Oneindia | 12th Aug, 2020 01:54 PM
 • ஜாம்பியா

  இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இவரது தாய் வழி தாத்தா ஜாம்பியாவில் இருக்கும் லுசாகாவில் வசித்து வந்தார். அங்கு கமலா ஹாரிஸ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு 5 வயது. கோபாலன் அரசு பதவியில் இருந்தபோது, மத்திய அரசு இவரை ஜாம்பியாவுக்கு அனுப்பியது. ரொடீசியாவில் இருந்து வரும் அனாதைகளை மேற்பார்வை செய்ய அனுப்பி இருந்தது. கோபாலான், 1930களில் கல்லூரி படிப்பை முடித்து இந்திய சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். அப்போது ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்து வந்தார்கள்.


 • தாத்தா கோபாலன்

  இவரது இறுதிக்காலம் சென்னையில்தான். இதன் பின்னர் தன்னுடன் தனது தாத்தா கடிதங்கள் மூலம் உறவுகளை வைத்துக் கொண்டு இருந்தார் என்கிறார் கமலா. இவரது தாத்தா கோபாலன் 1998ல் காலமானார். இதற்குப் பின்னரும் பல பேட்டிகளில் தனது தாத்தா கோபாலனை புகழ்ந்துள்ளார் கமலா.


 • கமலா தாய் சியாமளா

  இவரது தாய் சியாமளா கடந்த 1958ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பெர்க்லி சென்று படிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். ஓய்வுக்குப் பின்னர் தனது நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்க கோபாலன் சிரமப்பட்டார். அந்த நிலையில்தான் கமலாவின் தாயும் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இதற்கு கோபாலன் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒப்புக் கொண்டார். அந்தக்கால கட்டத்தில் இந்தியாவில் இருந்து நிறைய பெண்கள் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றுள்ளனர்.


 • தாய் தந்தை பூர்வீகம்

  சென்னையில் இருந்து 180 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் பைங்கநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன். இவர் ஒரு பிராமின். இவர் ராஜம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் தமிழ் பிராமின். துவக்கத்தில் ஸ்டெனோகிராபராக தனது பணியைத் துவக்கினார். புதுடெல்லியில் இருந்து மும்பை, பின்னர் கொல்கத்தா என்று தனது பணிகளுக்காக இடமாற்றம் பெற்று சென்றார். கமலாவின் தாய் சியாமளா கர்நாடகா சங்கீதம் கற்றவர்.


 • ஊட்டச்சத்து படிப்பு

  அமெரிக்காவில் இருக்கும் பெர்க்லியில் படிக்கச் சென்ற சியாமளா ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியல் படிப்பை முடித்தார். இவருடன் அவரது பெற்றோர் கடிதத்தின் மூலம் தொடர்பு வைத்து இருந்தனர். பெர்க்லியில் எங்கு இருக்கிறார் தனது மகள் என்பதை மேப் மூலம் கோபாலன் அறிந்து கொண்டார். இதற்குப் பின்னர் ஒரு முறை தனது பெற்றோரை பார்த்துச் சென்றுள்ளார்.


 • கறுப்பர் தந்தை

  தீவிர மனித உரிமை இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். அதுதொடர்பான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போதுதான் இவருக்கு டொனால்ட் ஹாரிஸ் சந்திப்பு கிடைத்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் 1963ல் திருமணம் செய்து கொண்டனர். டொனால்ட் ஜமைக்காவைச் சேர்ந்த கறுப்பர். இவர்களது திருமணத்தில் கோபாலன் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பண வசதி இல்லாததுதான். சியாமளா புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், தந்தை டொனால்ட் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றியவர்கள்.

  கமலா மற்றும் அவரது சகோதரி மாயா இருவரும் 4, 5 வயதில் இருந்தபோது அவர்கள் இருவரையும் ஜாம்பியாவுக்கு சியாமளா மற்றும் டொனால்ட் அழைத்துச் சென்றுள்ளனர்.


 • சேலை அணித்து சியாமளா

  இதையடுத்து சியாமளா தனது கணவர் டொனால்டை 1970களில் விவாகரத்து செய்தார். இதற்குப் பின்னர் அடிக்கடி தனது மகள்களை இந்தியாவுக்கு சியாமளா அழைத்து வந்தார். குறிப்பாக சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை வந்தாலும் உறவினர் வீட்டு விசேஷங்களில் சேலை அணித்து சியாமளா கலந்து கொள்வார். தமிழில்தான் பேசுவார். தனக்கு இரண்டு கறுப்பின இன குழந்தைகள் என்றும், அவர்களை அப்படியே வளர்க்க விரும்புகிறேன் என்றும் சியாமளா கூறியது உண்டு.
வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபருக்கான களத்தில் இருப்பவர் இந்திய வம்சாவழியான, தமிழர் கமலா ஹாரிஸ். இவரது அம்மா வழி பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அடிக்கடி சென்னைக்கு வந்து செல்லும் பழக்கம் கொண்டு இருந்தார். அவரது நினைவுகள், பண்பாடுகள் அனைத்தும் சென்னையை ஒட்டியே இருக்கிறது.

அம்மா சியாமளா கோபாலன், இவரது தந்தை பிவி கோபாலன். மத்திய அரசின் உயர் பதவில் இருந்தவர். இவரது தாய் ராஜம் கோபாலன் என்று தமிழகத்தை இவர்களது பூர்வீகம் சுற்றுகிறது.

பெசன்ட் நகரில் தாத்தா விதைத்த விதை...இன்று அமெரிக்க துணை அதிபர் போட்டியில்...கமலா ஹாரிஸ்!!

 
ஆரோக்கியம்